Header Ads



பள்ளிவாசல் சுவரில் உருவப்படங்கள், வரையமாட்டோம் என உறுதியளித்துவிட்டு அதை மீறிவிட்டார்கள் - பள்­ளி­வாசல் இமாம் அஹ்லம்

பள்­ளி­வாசல் சுவரில் உரு­வப்­ப­டங்கள் வரைய மாட்டோம் என சித்­திரம் வரை­வ­தற்கு வந்­த­வர்கள் உறு­தி­ய­ளித்­த­தை­ய­டுத்தே பள்­ளி­வாசல் நிர்­வாகம் அனு­ம­தி­ய­ளித்­தது. ஆனால் அவர்கள் வழங்­கிய உறு­தி­மொ­ழியை மீறி பள்­ளி­வாசல் சுவரில் உரு­வப்­ப­டங்­களை வரைந்­தி­ருக்­கி­றார்கள் என வேவல்­தெ­னிய, ரதா­வ­டுன்ன சபீலுல் ஹுதா பள்­ளி­வாசல் பேஷ் இமாம் மொஹமட் நவாஸ் மொஹமட் அஹ்லம் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

ரதா­வ­டுன்ன பள்­ளி­வாசல் சுவரில் உரு­வப்­ப­டங்­களை அப்­ப­குதி பெரும்­பான்­மை­யினர் வரைந்­தி­ருப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் என்­போரின் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இச்­சம்­பவம் தொடர்பில் பள்­ளி­வா­சலின் இமாம் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘சுவர்­களை அழ­கு­ப­டுத்தும் திட்­டத்தின் கீழ் பள்­ளி­வாசல் சுவ­ரிலும் சித்­திரம் வரை­வ­தற்கு சிலர் வந்து அனு­மதி கோரி­னார்கள். உரு­வப்­ப­டங்கள் வரை­யாது சித்­தி­ரங்கள் வரை­யலாம் என அனு­மதி வழங்­கப்­பட்­டது. அவர்கள் வந்து சுவரை முதலில் சுத்தம் செய்­தனர்.

மறு­தினம் மாலை 4 மணி­ய­ளவில் வந்து சித்­திரம் வரைய ஆரம்­பித்­தார்கள். பள்­ளி­வாசல் சுவரில் உரு­வப்­ப­டங்கள் வரைய வேண்டாம் என வேண்­டினோம். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்­டார்கள். அடுத்த நாள் காலை 7 மணி­ய­ளவில் சித்­தி­ரங்­களை வரைந்து பூர­ணப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். நான் வந்து பார்த்­த­போது எங்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­யையும் மீறி சுவரில் உரு­வப்­ப­டங்கள் வரை­யப்­பட்­டி­ருந்­தன.

உடனே நாம் எங்கள் பகு­திக்கும் பொறுப்­பான கிராம சேவை­யா­ள­ரிடம் முறை­யிட்டோம். ஆனால் அவரால் எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இப்­ப­கு­தியில் பள்ளிவாசலைச் சூழ 5 முஸ்லிம் குடும்பங்களும் மேலும் 25 குடும்பங்களும் வாழ்கின்றன. பள்ளிவாசல் சுவர்களில் உருவப்படங்கள் வரைவதை சம்பந்தப்பட்டவர்கள் தடை செய்ய வேண்டும் என்றார்.-Vidivelli

ஏ.ஆர்.ஏ. பரீல்

1 comment:

  1. Next day morning 7???what about subah prayer???

    ReplyDelete

Powered by Blogger.