Header Adsசந்தேகத்தில் கைதான முஸ்லிம், இளைஞர் தடுப்புக்காவலில் மரணம்

- எம்.பெளசர் -

அரசாங்கத்தினைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் பயங்கரவாதி மரணம் !
பெருமளவு முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு மரணம்!
எம்மை பொறுத்தவரை ஒரு முஸ்லிம் அரசியல் கைதி கொலை!

சஹ்ரானின் ஈஸ்டர் தாக்குதல் படுகொலைகளை அடுத்து, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காத்தான்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தடுப்புக்காவலில் மரணமடைந்திருப்பதாக  தட்டையாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.அவர் எப்படி மரணமடைந்தார் என்கிற எந்த தகவலும் அச் செய்தியில் இல்லை.

21 ஏப்ரல் தாக்குதல் நடந்து இன்றுடன் கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிறது.  இந்த மரணமடைந்துள்ள அரசியல் கைதி (சந்தேகநபர்)ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக கைது செய்யப்பட்டவர் என்பதால் 6 மாதத்திற்கு மேல் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர் என்பது உறுதி!

*இவர் தடுத்து வைக்கப்பட்ட காலப்பகுதியில் இவரைப் பார்ப்பதற்கு இவரது குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டனரா? சட்டத்தரணிகள் இவரை சந்தித்துள்ளனரா?

*இவர் தடுத்துவைக்கப்பட்ட காலத்தில் வைத்திய பரிசோதனை , மருத்துவ சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டாரா?

* இவரிடமிருந்து ஏதாவது ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதா?

* இலங்கை அரசாங்கம் இவர் மீது ஆதாரபூர்வமான குற்றச்சாட்டு அறிக்கையை முன் வைத்துள்ளதா?

*ஆதார குற்றச்சாட்டுக்களை திரட்டி இருப்பின் கடந்த 6 மாதமாக இவரை நீதிமன்றம் முன்  ஏன் நிறுத்தவில்லை என்கிற பல் வேறு கேள்விகள் எம்மிடமுள்ளன.

இப்படி ஆயிரக்கணக்காண சிங்கள, தமிழ் இளைஞர் யுவதிகள் இந்த தடுப்புக்காவல் விசாரணைக் காலத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். இப்போது முஸ்லிம் தரப்பிலிருந்து ஒரு முதல் மரணம் நிகழ்ந்துள்ளது.

இது பற்றி இலங்கை முஸ்லிம் சமூகம் கொஞ்சம் ஆழ அகலமாக சிந்திக்க வேண்டிய நேரமிது.

நான் ஏலவே சொன்னது போல் , அரசாங்கத்தினைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் பயங்கரவாதி மரணம்தான் இது !
 பெருமளவு முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு மரணம் என்கிற வகையில்  இதனைக் கடந்து போய் விடாதீர்கள்.

பயங்கரவாத தாக்குதலுடன் இந்த இளைஞர் சம்பந்தப்பட்டிருந்தால், ஆதாரங்களை முன் வைத்து நீதிமன்றின் முன் நிறுத்தி தண்டணையை பெற்றுக் கொடுங்கள். 

இப்படியான சட்டத்திற்கு புறம்பான மரணங்களை அனுமதிக்க முடியாது!

நாம் மிக உறுதியாக சொல்கிறோம், இந்த இளைஞனின் மரணம், ஒரு முஸ்லிம் அரசியல் கைதியின் மேலான 
கொலையாகும்.
  
அரசாங்கம் எப்படி? இந்த மரணம் நிகழ்ந்தது என்பதை தெரிவிக்க வேண்டும்!

சித்திரவதை, துன்புறுத்தலால் இந்த மரணம் நிகழவில்லை என்பது நிருபிக்கப்படல் வேண்டும்.

சுயாதீனமானவர்களால்  இவரின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படல் வேண்டும்!

Demand inquest
What is the post-mortem enquiry revealed?
Is there a necessity for an independent enquiry?

What preventive action has been taken for non-recurrence?

If torture is banned what action has been taken by authorities to prevent torture?

Are they still in employment or have they have been sacked from enquiry duties?

Has human rights commission been notified by family?

ஏன் இதனைக் கோருகின்றோம் என்றால் , நாளை இப்படி நூற்றுக் கணக்கில் நிகழ வாய்ப்புள்ளன.

இவற்றை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கத்தினை நோக்கி இப்படியான கேள்விகள் எழ வேண்டும்... எழுமா????
———
மேலதிக தகவல்களுக்கு

காத்தான்குடி முதலாம் குறிச்சி நூர்முகம்மட் லேனைச் சேர்ந்த செயினுலாப்தீன் முகம்மட் ஜெஸீல்(வயது 19) என்பவர் கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பத்தையடுத்து ஸஹ்றான் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களில் ஒருவராக மேற்படி இளைஞரும் கைது செய்யப்பட்டு கொழும்பில் வைக்கப்பட்டிருந்தார்.

மேற்படி இளைஞர் உயிரிழந்ததாக இன்று (13.12.2019) வெள்ளிக்கிழமை காலை  காத்தான்குடி பொலிசார் குறித்த இளைஞனின் வீட்டுக்கு அறிவித்துள்ளனர்.
இவரது சகோதரரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Its was expected & will be happens for rest of All will be soon after the General Election..,

    ReplyDelete

Powered by Blogger.