Header Ads



சஜித்தை கட்சித் தலைவராக்கும் அடுத்த, இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளோம் - ஹரின்

எதிர்வரும் நத்தார் தினத்துக்கு முன்னர் ஐக்கிய தேசிக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கட்சியை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல புதிய தலைமைத்துவம் ஒன்று தேவைப்படுகின்றது. இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் புதிய தலைமைத்துவத்தை மக்கள் விரும்புகின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமக்கு கிடைத்த மக்கள் ஆதரவு இதில் பாரிய பங்களிப்பு செலுத்தியுள்ளது. அதற்கமைய சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக்கும் எமது அடுத்த  இலக்கை  நோக்கி நாம் பயணிக்க ஆரம்பித்துள்ளோம். 

இது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் பொறுப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. 

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி இப்போது சஜித் பிரேமதாசவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவில் அதனை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. 

இது எமது முதல் இலக்காக இருந்தது. அதனை நாம் தாண்டியுள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் பலமான கட்சியாக செயற்படவும் அடுத்தகட்ட அரசியல் வேலைத்திட்டங்களுக்கும் இது மிகப்பெரிய பலமாக அமையும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

1 comment:

  1. இப்படியே சண்டை புடிச்சிக இரிங்கோ பொதுதேர்தலும் முடிய போகுது

    ReplyDelete

Powered by Blogger.