முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள், பிரதமர் மகிந்தவை சந்தித்து பேச்சு
இலங்கைக்கான மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று -05- சந்தித்தார்.
குறித்த சந்திப்பானது அலரி மாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்திற்கு எப்போதும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவு இருக்கும் என்றும், எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதார மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் தூதுவர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சந்திப்பில் ஓமான், பாலஸ்தீனம், ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தூதவர்கள் கலந்து கொண்டதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் எவ்வளவுதான் இந்தியா சீனா பின்னால் ஓடினாலும் அரபு நாடுகளின் உதவி இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. எனவே எமது அரசியல் தலைவர்களும் புத்திஜீவிகளும் அரபு நாடுகளின் தலைவர்களுடனும் தூதரகங்களுடனும் சிறந்த முறையில் உறவை பேணி இந்த அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
ReplyDelete