Header Ads



ஹஜ் பயணத்தில் மகிந்தவின் இறுக்கமான நிலைப்பாடு - இலங்கைத் தூதரகத்திற்கு பொறுப்பு - அரசியல்வாதிகளுக்கு ஆப்பு

-Sivarajah-

இம்முறை ஹஜ் பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் நலன்கருதி அந்த விடயத்தை நேரடியாக கையாளும் பொறுப்பை சவூதியில் உள்ள இலங்கைத் தூதுவரிடம் வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே கடந்த காலங்களில் ஹஜ் விவாகரத்திற்கு பொறுப்பாக அரசியல்வாதிகளை நியமித்தமையாலும், எண்ணற்ற ஹஜ் முகவர்கள் எழுந்தமானமாக நியமிக்கப்பட்டதாலும் சாதாரண மக்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாமல் வசதி படைத்தவர்கள் மாத்திரம் செல்லக் கூடிய நிலைமை இருந்ததாக பலதரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறியமுடிந்தது.

இதன்படி ஹஜ் ஏற்பாடுகளுக்கான பயணம் என்று ஆளுங்கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் சவூதி செல்ல முடியாதெனவும் ஹஜ் கோட்டாக்களை வழங்குவது கூட ஒரு பொறிமுறையின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் குறிப்பிட்டன . Tn

6 comments:

  1. WELL DONE SALUTE FOR YOU, YOU REMOVE SOME BUGS

    ReplyDelete
  2. Appreciate for the good move..

    ReplyDelete
  3. Very good move by our Hon.Priminister

    ReplyDelete
  4. இந்த அரசாங்கம் சாதாரண மக்கள் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் செயட்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது

    ReplyDelete
  5. very good என்டானாம் ஹாஜிகளற்ற முஸ்லிம் பெருமக்கள். பிரதமர் அவரகளுக்கு எனது நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.