Header Adsமுஸ்லிம்களுடன் உளத்தூய்மையுடன் செயற்பட்டு, பள்ளிவாசல் கட்ட கற்களை தூக்கிக்கொடுத்து, இனவாதிகளை துரத்திய ஜயரத்னா

1993ம் ஆண்டு கெலிஓய கலுகமுவ பெரிய பள்ளிவாசல் கட்டல் நிர்மாணப்பணிகள் தொடர்ந்த போது அந்த இடத்துக்கு திடீரென தி.மு. ஜயரத்ன அவர்கள் விஜயம் செய்தார்கள். அப்பொழுது முதலாம் மாடிக்கான காங்கிரீட் போடப்பட்டுக்கொண்டிருந்தது. முழு ஊரும் இதற்கான பணியில் ஈடுபட்டதை கண்ட அவர் ஆச்சரியமடைந்தனர். அவர் மேல்மாடிக்கு ஏறி வேலைகளை அவதானித்தார். அத்துடன் நின்றுவிடவில்லை ஊர்மக்கள் வருகையிலிருந்து கற்களை பரிமாறுவதைக் கண்ட அவர் தானும் ஒருவராக இருந்து கற்களை பரிமாறி அவர்களுக்கு தோளோடு தோள் நின்று நின்று ஒத்துழைத்தார். இது அன்னாரது தாழ்மையான மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது. 

உளத்தூய்மையுடன் முஸ்லிம் சமூகத்துக்காக இவர் ஒத்துழைத்தார் என்பதற்கு இது ஒரு முக்கியமான சான்றாகும்.தான் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்த போது உஸ்பகிஸ்தானுக்கான தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்தார். இவ்வேளையில் அழகான தொப்பிகளை அணிந்து முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்றுவதைக் கண்ட இவர் அதனால் ஆகர்ஷிக்கப்பட்டு தன்னுடைய இலங்கையில் உள்ள முஸ்லிம் நண்பர்களை நினைவு உறுபவராக பல தொப்பிகளை அங்கிருந்து வாங்கிக் கொண்டு வந்து அவர்களுக்குப் பரிசாக அளித்தார்.

நாங்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் அவர் எங்கள் சமூகத்திற்கு செய்த அளப்பரிய சேவையை என்றும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அவர் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்ட போது பெரும்பான்மையான மக்கள் அவரை கைவிட்ட பொழுதும் முஸ்லிம் சமூகம் என்றும் அவருடனே இருந்து அவருக்காக பூரண ஒத்துழைப்பை வழங்கினார்.

இப்பிரதேசத்திலே வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும் இவரை மறக்காமல் இருக்கும் சம்பவமாக 2014ம் ஆண்டு கம்பளையில் நடந்த இன அசம்பாவிதத்தை குறிப்பிடலாம். சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த இனக்கலவரத்தை ஞாபகப்படுத்தி முஸ்லிம்களின் மத்தியிலே மிக மோசமான இனக்கலவரம் ஒன்றை உருவாக்குவதற்கு பெரும்பான்மை சமூகத்தினர் ஒரு பேரணியாக ஒன்று சேர்ந்து முஸ்லிம்களை தாக்க கம்பளை நகருக்குள் அவந்திருப்பதை அறிந்து மறைந்த பிரதமர் தி. மு. ஜயரத்ன அவர்கள் முச்சக்கர வண்டி ஒன்றிலே ஏறி உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி அடித்தார். காலோச்சிதமான அவரது முடிவு கம்பளை நகரில் இனங்களுக்கு மத்தியிலே அமைதியை ஏற்படுத்த வழி கோரியது.நாடு முழுவதும் பரவி முஸ்லிம்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த இருந்த இந்த அசம்பாவிதத்தை தனது சமயோசித முடிவால் தடுத்து நிறுத்தினார்.

     1960ம் ஆண்டிலிருந்து அவருடன் நான் நெருங்கிப் பழகியவர் என்ற வேலையில் அவரை நான் மனிதப்புனிதமாக மதிக்கிறேன். கம்பளை நகர அபிவிருத்தியில் மாபெரும் பங்கேற்றிய ஒரு சமூக சீர்திருத்த வாதி.அவர் விட்டுச் சென்ற அந்த அடையாளங்கள் எப்பொழுதும் கம்பளை வாழ் மக்கள் மனதில் நீண்ட இடம் பிடித்திருக்கும்.அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போமாக.

அவரது இழப்பு இலங்கைவாழ் அனைத்து மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். அவர் தன்னுடைய அரசியல் பயணத்தை இளம் வயதிலேயே ஆரம்பித்தார். ஒரு மாணவனாக இருந்துக் கொண்டு காலம் சென்ற முன்னால் அமைச்சர் T.B இலங்கரத்ன அவர்களுடைய வழிகாட்டுதலின் கீழ் அரசியல் துறையில் தன்னை வளர்த்துக் கொண்டார். உடபலாத கிராம சபையின் அங்கத்தவராக 1960களில் தெரிவு செய்யப்பட்டார். இது கம்பளை தேர்தல் தொகுதியிலிருந்து அவருக்கு பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான வரப்பிரசாரத்தையும் அளித்தது. பல பொறுப்புள்ள அமைச்சுப் பதவிகளை வகித்த இவர்,இறுதியில் இலங்கை திருநாட்டின் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார். நீண்ட காலமாக புரக்கணிக்கப்பட்டிருந்த கம்பளை தேர்தல் தொகுதியை பிரதேசத்திலே அபிவிருத்தியடைந்த ஓர் தொகுதியாக தான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அமைத்துக் காட்டினார். தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஆஸ்பத்திரிகைகளைக் கட்டுவதற்கும், பாதைகளை புனரமைப்பதற்கும், மின்சாரம்,  நீர் வழங்கல் திட்டங்களை செயற்படுத்துவதற்கும் பயன்படுத்தினார்.

அக்காலத்தில் காணி இல்லாமலும் வீட்டு வசதிகள் இல்லாமலும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இப்பிரச்சினைகளை கண்கூடாக கண்டறிந்த பிரதம மந்திரி தி. மு. ஜயரத்ன அவர்கள் இதனைக் கேட்டதும் அல்லும் பகலும் பாடுபட்டார்.இதன் விளைவாக காணி சீர்திருத்தம் கமிஷனின் உதவியுடன் அரசாங்கத்திற்கு சொந்தமான பல ஏக்கர் காணிகளை ஏழை மக்களுக்கு பிரித்துக் கொடுத்தார். இதனை ஒரு சமூகத்திற்கு மாத்திரம் வழங்காது எல்லா சமூகத்திற்கும் பிரித்துக் கொடுத்தது அவரது பெருந் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

ஐ.எல்.எம். ராஸிக் 

1 comment:

  1. True Very Nice person, Good with All community specially with Gampola Muslims...

    ReplyDelete

Powered by Blogger.