Header Ads



சஜித்தான் பிரதமர் வேட்பாளர் - ரணில் தெரிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவே பிரதமர் வேட்பாளர் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தன்னிடம் தெரிவித்தார் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா, உப்பாறு பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்பொழுது தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பாரிய சிரமத்தினை எதிர்நோக்கி உள்ளனர். ஆனால் இதுவரை இந்த மக்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவே பிரதமர் வேட்பாளர் என எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் என்னிடம் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்த வாக்குகளை வைத்து பார்க்கும் போது எமக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 104 தொடக்கம் 106 ஆசனங்களைப் பெற முடியும்.

கட்சி என்ற ரீதியில் ஒற்றுமையாக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தி சிறந்த முறையில் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் போது எம்மால் 113இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற முடியம். அதனை பெறுவதற்கு எமக்கு தேவைப்படுவது ஜனாதிபதி தேர்தலில் பெற்றதை விட மேலதிகமாக 7 இலட்சம் வாக்குகளே என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Personal conversations don’t count. He should publicly announce that decision and retire from politics. Sooner the better.

    ReplyDelete
  2. Not enough Ranil going to be a leader of unp untill parliment election he should resign soon.

    ReplyDelete

Powered by Blogger.