சேற்றுடன் பாதணிகளை அணிந்து, வீட்டிற்குள் வராதே எனக்கூறிய தாய் - மகள் எடுத்த விபரீத முடிவு
வெலிமடையில் தாய் கண்டித்தமையினால் சிறுமி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிமடை - நுகதலாவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டிலிருந்த கிருமிநாசினியை பருகியே தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேற்றுடன் பாதணிகளை அணிந்து வீட்டிற்கு வருவதனை தவிர்க்குமாறு மகளிடம் தாய் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மகள் விஷமருந்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை வெலிமடை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி வெலிமடை பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment