Header Ads



உண­வ­கத்தை முற்­றுகையிட்­ட பிக்குகள் - மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

பல்­லெபெத்த, கொஸ்­வெட்­டிய என்ற பகு­தியில் அமைந்­துள்ள உண­வ­க­மொன்றில் பௌத்­தர்­களை அந்­நிய மதம் ஒன்றுக்கு மாற்றும் முயற்­சிகள் இடம்பெறு­வ­தாக கூறி நேற்று முன்­தினம் பௌத்த பிக்­கு­களும், பிரதேச மக்கள் சிலரும் குறித்த உண­வ­கத்தை முற்­றுகையிட்­டுள்­ளனர்.

தனியார் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான உண­வகம் ஒன்றை ஒப்­பந்த அடிப்­ப­டையில் வேறொ­ரு­வ­ருக்கு வழங்­கி­யி­ருந்த உண­வக உரிமையாளர் மற்றும் பெளத்த பிக்­குகள் பிரதேச­வா­சிகள் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து மேற்­படி உண­வ­கத்தை முற்­றுகையிட்டு வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டுள்ளனர்.

இந்த வாக்­கு­வாதம் மோதல் சம்­ப­வமாக உரு­வாகும் நிலை ஏற்­பட்­டதால் அவ்­வி­டத்­துக்கு பொலிஸார் வர­வழைக்கப்­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து இப்­பி­ரச்­சினை தொடர்பில் அங்கு கூடி­யிருந்த அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் பொலிஸார் சம­ர­சத்தை ஏற்­ப­டுத்த முயற்சித்த போதிலும் அவ்­வி­டத்தில் கூடி­யிருந்த பிர­தே­ச­வா­சிகள் தொடர்ந்து வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டனர்.

இவ்­வி­டத்தில் பெளத்த ஆலயம் ஒன்று பக்­கத்தில் இருப்­ப­தா­கவும் இவ்வாறான விடயம் இவ்­வி­டத்தில் இடம்பெறுவதை அனு­ம­திக்க முடி­யாது எனவும் அங்கு கூடிய பிக்­குகள், பொதுமக்கள் கடு­மை­யான தொனியில் எச்சரித்­தனர்.

அத்­துடன் தான் குத்­த­கைக்கு வழங்கிய இவ்­வி­டத்தில் இவ்­வா­றான சம்­பவ மொன்று நடப்­பதை தான் அறிந்­திருக்கவில்லை என அவ்­வி­டத்­துக்கு வருகை தந்­தி­ருந்த உண­வ­கத்தின் உரி­மை­யாளர் தெரி­வித்தார். இத­னை­ய­டுத்து குற்றச்சாட்டு உண்மையானதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெ டுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்த தையடுத்து அங்கு கூடியிருந்தோர் கலைந்து சென்றனர்.

1 comment:

  1. வத கொத்து,வத பரோட்டா கதையை மீண்டும் ஆரம்பிக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.