Header Ads



கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விரைவாக நடவடிக்கை வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் இன்று அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது கல்முனை உப பிரதேச செயலகத்தினை முழுமையான அதிகாரத்துடன் தரமுயர்த்த வேண்டும் என விநாயகமூர்த்தி முரளிதரன் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் கல்முனை உப பிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படாத நிலையில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும் அதை இன்று ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் முடிந்து பத்து வருடகாலமாகியும் கூட கல்முனை உப பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் தரமுயர்த்தப்படாமைக்கான ஆக்கப்பூர்வமான காரணங்கள் எதுவும் இல்லாமை கவலையளிக்கிறது என அமைச்சர் தன்னிடம் கூறியதாக கருணா அம்மான் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சரிடம் கடந்த அரசின் பாரபட்ச செயற்பாடாகவே இதனை பார்ப்பதாகவும், தற்போதைய நாட்டின் நிலைமைகளை கருத்திற்கொண்டு கல்முனை உபபிரதேச செயலகம் விரைவாக தரமுயர்த்தப்பட வேண்டும்.

கல்முனை நகரைச் சுற்றியுள்ள ஏனைய பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் கல்முனை உபபிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படவில்லை. இதற்காக பல போரட்டங்கள் மேற்கொண்ட போதும் அரசு அதை செவிசாய்க்கவில்லை என்றும் கருணா அம்மான் கூறியுள்ளார்.

இதையடுத்து, அரசாங்கம் என்பது மக்களின் குறைகளைத் தீர்த்து மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது ஆகும். தொடர்ச்சியாக மக்களை இவ்விடயத்தில் ஏமாற்றுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல. எனவே, உடனடியாக எமது அரசு தலையிட்டு தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Appo Ivan munnal payangaravathi thanepa athaiyum serthu podungo jaffna Muslim...

    ReplyDelete
  2. சாய்ந்த மருதுபோல கல்முனை வடக்கு தமிழ் பிரிவும் பிரிந்து செல்வது தொடர்பாக கல்முனைப் பகுதி முஸ்லிம்களும் தமிழரும் இருந்து பேச வேண்டும். கல்முனை வடக்குத் தொடர்பாகவும் நற்பிட்டிமுனை காரைதீவு முஸ்லிம் பகுதிகள் தொடர்பாகவும் பேச இன்னுன் காலங் கடந்துவிடவில்லை. இருபகுதிக்கும் பாதகமில்லாத ஒரு பொது இணக்கத்துக்கு வருவது அவசியம். அதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பம் சந்தர்ப்பம் தவற விடப்படக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.