Header Ads"ஆட்சி அதிகாரங்களுக்கு சொந்தக்காரன், அனைத்தையும் படைத்த அல்லாஹூ தாஆலாவே"


உலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டு, அவதானிக்கப்பட்டு வந்த பிரித்தானிய தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.  இஸ்லாமிய அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவாகவே தெரிகிறது. 

ஆட்சி அதிகாரங்களுக்கு சொந்தக்காரன் அனைத்தையும் படைத்த அல்லாஹூ தாஆலாவே ..யாரை அவன் விரும்புகிறானோ அவனுக்கு ஆட்சியை அவன் வழங்குவான் ,ஆட்சியை யாரிடம் இருந்து பறிக்க விரும்புகின்றானோ அவனிடம் இருந்து அதனை பறிக்கிறான் .

முஸ்லிம்களான நாம், சாதகமான விடயங்களையும் பாதகமான விடயங்களும் சாதாகமாவே எடுப்பது அவசியம் .  

உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான ஆட்சியாளர்களின் அதிகரிப்பு பல நமக்குள்ளேயே பல கேள்விகளை எழுப்பியுள்ளன .நாம் ஒவ்வொருவருமே நம்மை நாமே புடம்போடு நமது இஸ்லாமிய அடிப்படைகளை சுய பரீட்சிப்பு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

சரி நடந்தது முடிந்த தேர்தலில் சில அவதானிப்புக்களை காண முடிகின்றது 

 ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகும் செயற்பாடுகளில் கடந்த பாராளுமன்றத்தில் லேபர் கட்சி ஏற்படுத்திய தாமதத்தாலும் முட்டுக்கட்டைகளாலும் பெரும்பான்மையான மக்கள் அதிருப்தி 
 அடைந்திருந்தமையை  தேர்தல் முடுவுகளில் காண முடிகின்றது. இதனை லேபர் கட்சி தமது தோல்வியில் முக்கிய காரணமாக பிரெக்சிட்டை குறிப்பிட்டுள்ளது .ஜெரேமி கோபின் சமாதானத்தை விரும்புவர் .சிறுபான்மை மக்களில் விசேடமாக முஸ்லீம்களிடம் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பவர் .பலஸ்தீன ஆதரவாளர் . இவருக்கு எதிராக பிரிட்டனின் பெரும்பாலான மீடியாக்கள், டப்லொயிட்கள் திட்டமிட்ட ரீதியில்  செயற்பட்டமை சாதாரண மக்களில் அவருக்கு நம்பிக்கை இல்லாத்தன்மையை ஏற்படுத்தியது . உழைப்பாளிகளை விட   வேலை செய்யாமல் அரச உதவி நிதிகளில் வாழும்  , குறைந்த  வருமானம் உள்ளவர்கள் மீது அதீத அக்கறை காட்டியமை ,'இலவசமாக   அது.. இது ..' என வாக்குறுதிகளை அள்ளிக்கொட்டியமை , ஆகியன கோபின் மீதான உழைப்பாளி வர்க்க சராசரி ஆங்கில மக்களின் அதிருப்தியை ஏற்படுத்திருந்தது .  பிரிட்டனின் பாதுகாப்பு தொடர்பில் கோபின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை . அத்தோடு அவரது செலவு பட்டியல் பிரிட்டனை வங்குரோத்து ஆக்கி விடும் என மக்கள் அஞ்சினார்கள் ..குடிவரவை மட்டுப்படுத்த போவதாகவும் திறன் அடிப்படையிலான குடிவரவு கொள்கையை அறிமுகப்படுத்தப்போவதாகவும் கண்சவேட்டிவ் கட்சி வாக்களித்து  இருந்தமையும் மக்கள் மத்தியிலே எடுபட்டிருந்தது  -முடிவு கன்சவேட்டிவ் கட்சி பெரும்பாண்மை ஆசனங்களை பெற்றுள்ளது .

இந்த தேர்தல் முடிவு போரீஸ் ஜோன்சனின் நண்பன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை மிகவும் மகிழ்ச்சி  அடைய வைத்திருக்கிறது . ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிவதற்கு கடும் ஆதரவு தெரிவித்து வந்த ட்ரம்ப் , அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தங்களை செய்ய இது வழிகோலும் என எதிர்பார்க்கிறார் . ஐரோப்பிய தலைவர்களுக்கு இது கசப்பான செய்தி . ஏற்கனவே பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை இல்லாத நிலையிலேயே  ஒப்பந்தத்துடனான  பிரெக்சிட் இணக்கப்பாட்டை இரு தரப்பும் அடைந்திருந்தனர் ..அப்போதைய நிலையில் போரிஸிடம் போதிய பெரும்பாண்மை இல்லாதிருந்ததால் பேரம்பேசும் சக்தி மட்டுப்படுத்தப்படுத்தது . இப்போது நிலைமை வேறு. ஏற்கனவே இணங்கப்பட்ட உடன்படிக்கையில்  இருந்து பேச்சுவார்த்தை தொடருமா இல்லை மேலும் சலுகைகள் மேலும் பேரம்பேசுதல்கள் இடம்பெறுமா என்பதை அடுத்து வரும் மாதங்கள் பதில் சொல்லும் .அதனால்தான் இன்றய ஜேர்மனிய நாளிதழ் Die Welt  ' எந்த   வகையான போரிஸ் ஜோன்சனை நாம் பார்க்கப்போகிறோம் ' என தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது 

ஐரோப்பாவுடனான எதிர்கால உறவுகள் , வர்த்தக தொடர்புகள் , குடிவரவு கட்டுப்பாடுகள் , ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு , வட அயர்லாந்தின் நிலைப்பாடு ,பிரிட்டனில் உள்ள ஐரோப்பியர்களின் நிலை , ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன் நாட்டவர்களின் நிலை என்பவை விரைவிலே தீர்மானிக்கப்படும் .

மொத்ததில் , சராசரி ஆங்கில மக்கள் கணிப்பீட்டில் இலவச வாக்குறுதிகளுக்கும் , இழுபறிகளுக்கும், சோம்பேறித்தனத்துக்கும் ,  முயற்சி அற்ற தன்மைக்கும்,பெனிஃபிட் எனப்படுகிற அரசாங்க சமுக உதவிப்பண தங்கிவாழ் தன்மைக்கும் எதிராக  தாங்கள் வாக்களித்துள்ளதாக பெருமைப்படுகிறார்கள். 

அய்யாஷ் .

No comments

Powered by Blogger.