Header Ads



8 பிக்குகளின் உதவியோடு மகிந்தவை பிரதமராக்கியதற்காக, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - சம்பிக்க

மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதற்காக இலங்கை மக்களிடம் தாம் மன்னிப்புக் கேட்பதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு நேற்றைய தினம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது.

இந்நிலையில் இன்றைய தினம் -25-
கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், ஊடகவியலாளர்களிடம் பேசினார்.

அப்போது,கடந்த 2004ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதே தாம் செய்த மிகப்பெரிய தவறு என்றும் இதற்காக இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2004ஆம் ஆண்டு தமது கட்சி 8 பௌத்த பிக்குகளை நாடாளுமன்றத்தில் கொண்டிருந்ததாகவும் இந்த எட்டு உறுப்பினர்களின் துணையோடும் மகிந்தவிற்கு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சிப் பொறுப்பில் அவரை ஏற்றியதாகவும் இதற்காக இப்போது தாம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. He must beg pardon for creating and safeguarding the riots against
    Muslims

    ReplyDelete

Powered by Blogger.