Header Ads



முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வழங்கிய 5 மில்லியன் டொலர் - மல்கம் ரஞ்சித் விசாரிக்க வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும் என நம்புவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும்,

தாக்குதல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பின் பிரதான செயலாளர் 5 மில்லியன் டொலர்களை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்.

பணம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளதா என்பது குறிதது கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட கத்தேலிக்க திருச் சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டும் , எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே யால வனப் பகுதியில் நடக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக காடுகளில் இருக்கும் புலிகள் மற்றும் சிறுத்தைகளை வெளியில் வரவழைப்பதற்காக வேறு பிரதேசங்களில் இருந்து நாய்களை கொண்டு சென்று அந்த வன விலங்குகளுக்கு இரையாக கொடுக்கின்றனர்.

வெளிநாட்டவர்களை மகிழ்விப்பதற்காக அவர்களை யால வன பகுதிக்கு அழைத்துச் செல்லும் ஜீப் வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வழிக்காட்டில்கள் இதனை செய்கின்றனர். இந்த விடயம் உண்மையாக இருக்குமாயின் அது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் அவமதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. தேரர்கள் வெற்றிக்கு உதவியதால் அவர்கள் தான் உத்தரவிடுகின்றனர். தெரிவானவர்கள் என்ன செய்யப்போகின்றனரோ தெரியாது?

    ReplyDelete
  2. இந்த காவிகளுக்கு சமீப காலமாக மூளை கெட்டு விட்டது.

    ReplyDelete

Powered by Blogger.