Header Ads



புத்தளத்தில் 2 நாட்களாக கடும் மழை - 700 குடும்பங்கள் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 701 குடும்பங்களைச் சேர்ந்த 2528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

புத்தளத்தில் நேற்று (19) இரவு முதல் இன்ற (20) மாலை வரை தொடர்ச்சியாக கடும் மழை பெய்தது. 

குறித்த கடும் மழையினால், பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து செய்ய முடியாத அளவுக்கு வீதிகளில் வெள்ளநீரும் தேங்கி காணப்படுகிறது. 

இதேவேளை, இரண்டு நாட்களாக புத்தளத்தில் பெய்த கடும் மழையினால் நவைத்தேகம பிரதேச செயலகத்தில் 81 குடும்பங்களைச் சேர்ந்த 256 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்தில் 335 குடும்பங்களைச் சேர்ந்த 1273 பேரும், பல்லம பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பங்களைச் சேர்ந்த மூவரும் , புத்தளம் பிரதேச செயலகத்தில் 260 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேரும் , கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், 311 குடும்பங்களைச் சேர்ந்த 1128 பேர் மூன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

நவகத்தேகம பிரதேச செயலகத்தில் 81 குடும்பங்களைச் சேர்ந்த 256 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்தில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 752 பேரும் , கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பங்களைச் சேர்ந்த மூவரும் இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான சமைத்த உணவு, குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார். 

-ரஸ்மின்-

No comments

Powered by Blogger.