கொழும்பு மாநகர சபை கலைக்கப்படுமா..? ஜனாதிபதி அப்படி தீர்மானம் எடுக்கமாட்டார் என்கிறார் மேயர்
(எம்.ஆர்.எம்.வஸீம்)
பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொழும்பு மாநகரசபையை கலைக்கவோ விசேட ஆணையாளருக்கு கீழ் கொண்டுவரவோ ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.
ஜனாதிபதி அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நான் ஒருபோதும் நம்பப்போவதில்லை என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையின் மாதாந்த சபை அமர்வு இன்று மேயர் ரோஸி சேனாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் கொழும்பு மாநாகரசபை எல்லையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கேள்விக்கோரல் தொடர்பாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எம். நவ்பர் உரையாற்றுகையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கொழும்பு மாநகர சபை மேயர் ஆசனத்தையும் கைப்பற்ற அல்லது விசேட ஆணையாளருக்கு கீழ் இதனை கொண்டுவர சதித்திட்டங்கள் இடம்பெறுவதாக அறியக்கிடைக்கின்றது. இதுதொடர்பாக அவதானமாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
அத்துடன் அதனால் கேள்விகோரலின்போது அரச அதிகாரிகள் சட்டத்துக்கு முரணாக செயற்பட்டுள்ளார்களா என தேடிப்பார்க்க 5 பேர் கொண்ட குழுவை நியமிக்கின்றேன்.
விசாரணை அறிக்கையில் அதிகாரிகள் தவறு செய்திருப்பது உறுதியானால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடடிக்கை எடுப்பேன் என்றார்.
its too late...ongalala ondum panna mudiyathu ippadi nengale kannadi munnnal solli kondale oliya, niraivetru adikaratai vaithu ena venumdalum pannalam penna anagavum, anai pennagavum matruvadai tavira, madam...toliet ku 5.7 million selavlita ongada file ruki, anegamaga election mudinji ongaala kupiduvargal
ReplyDeleteYou know exactly what this guy is capable of. So stop pretending and pleading.
ReplyDeleteYour leader ranil basted spoiled country and party future
ReplyDelete