Header Ads



இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள், ஊடக சுதந்திரம் குறித்த வாக்குறுதிகளை வழங்கவேண்டும்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் ஊடக சுதந்திரம் குறித்த வாக்குறுதிகளை வழங்கவேண்டும் என எல்லைகளற்ற நிருபர்கள்அமைப்புவேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் தேர்தல் பிரச்சார காலத்தில் பக்கச்சார்பான சோடிக்கப்பட்ட செய்தியை வெளியிட மறுத்த ஊடகவியலாளர் ஒருவர் உரிமையாளரால் அச்சுறுத்தப்பட்டதுடன் பின்னர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என தெரிவித்துள்ள சர்வதேசஅமைப்பு   இலங்கையில் பத்திரிகையாளர்கள் எவ்வளவு அச்சுறுத்தல்களைஎதிர்கொள்கின்றனர் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

அவர் என்னை பார்த்து சத்தமிட்டார்,அச்சுறுத்தினார் என்னைதாக்க முயன்றார் என அந்த ஊடகவியலாளர் எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பிற்கு தெரிவித்துள்ளார் என அந்த அமைப்பு தனது அறி;க்கையில் குறிப்பிட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சார்பான  செய்தியை  செய்தி ஆசிரியர் என்ற அடிப்படையில் தான் வெளியிட மறுத்ததை தொடர்ந்தே அவர் இவ்வாறு நடந்துகொண்டார் என குறிப்பிட்டுள்ள ஊடகவியலாளர் தனது நடவடிக்கை காரணமாக பணியிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்து மறுநாள் தனக்கு கடிதம் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 16 ம் திகதிஇலங்கையில் இடம்பெறவுள்ளஜனாதிபதிதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தொடர்பான செய்தியை வெளியிடமறுத்தமைக்காகவே அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் எனவும் எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்ட விதம்இலங்கையில் பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ளது என எல்லைகளற்ற நிருபர் அமைப்பின் ஆசியா பசுவிக்கிற்கான தலைவர் டானியல் பாஸ்டர்ட் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் தங்கள் தொழிலைமுழுமையான சுதந்திரம் இல்லாமல் முன்னெடுக்க முடியாவிட்டால்  இந்த ஜனாதிபதி தேர்தல் எந்த வித  நியாயதன்மையையும் கொண்டிராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக பொதுவாக ஊடகசுதந்திரத்தையும் பத்திரிகையாளர்களின்  ஆசிரியபீட சுதந்திரத்தையும்  பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை இரு பிரதான வேட்பாளர்களும் வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும்  ஊடக சுதந்திர அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் இலங்கையின் ஜனநாயக சுதந்திரம் தொடர்பான புதியஜனாதிபதியின் அணுகுமுறை உன்னிப்பாக அவதானிக்கப்படும்  கவலைப்படுவதற்கான அனைத்து காரணங்களையும் கொண்டுள்ள பத்திரிகையாளர்களிற்கு புதிய ஜனாதிபதி நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் எனவும்அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இருபிரதான வேட்பாளர்களில் ஒருவரான  சஜித் பிரேமதாச  முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் என சுட்டிக்காட்டியுள்ள  எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு அவர் தனது பதவிக்காலத்தில் ஊடக சுதந்திரத்தை மீறியமைக்காக நினைவுகூறப்படுகின்றார் எனவும் தெரிவித்துள்ளது.

மற்றைய வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச - ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தினை பத்திரிகையாளர்கள் இருண்ட யுகம் என வர்ணிக்கின்றனர்,இக்காலப்பகுதியில் தங்களின் பணிக்காக 14 பத்திரிகையாளர்களாவது கொல்லப்பட்டனர்  என  எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தனது சகோதாரரின் பதவிக்காலத்தில் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார் அக்காலப்பகுதியில் அவர் தனதுபதவியை பயன்படு;த்தி பத்திரிகையாளர்கள்மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டார் எனவும் எல்லைகளற்ற நிருபர்கள்அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் பத்திரிகையாளர்கள் இந்த தேர்தல் முடிவுகள்தங்கள் ஆசிரியபீட சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலைகொள்வதற்கான காரணங்கள் உள்ளன எனவும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இரு பிரதான வேட்பாளர்களும் சிங்கள பௌத்த  இன தேசியவாத பிரச்சாரங்களைமுன்னெடுத்துள்ளனர் இது சிறுபான்மையினத்தவர்களிற்கு எதிரானது இதன் காரணமாக சிறுபான்மையின செய்தியாளர்கள் மேலும் அதிகளவு  அழுத்தங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அச்சத்தில்உள்ளனர் எனவும் ஊடகசுதந்திர அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.