Header Adsசகல தவ­றுகளும் இறு­தியில் சஜித் மீது சுமத்­தப்­பட்­டன - மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வருவோம்

எங்­களால் விடப்­பட்ட தவ­று­களை இனம் கண்­டு­கொண்­டுள்ளோம். அவற்றை திருத்­திக்­கொண்டு மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வருவோம். அத்­துடன் தோல்­வி­களை கண்டு ஒரு­போதும் சளைத்­து­வி­ட­மாட்டோம். கட்­சியில் இருந்­து­கொண்டே எனது அர­சியல் நட­வ­டிக்­கையை ஆரம்­பத்தில் இருந்து கொண்­டு­ செல்­ல­வுள்ளேன் என விளை­யாட்­டுத்­துறை முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சில்  இடம்­பெற்ற பிரி­யா­விடை நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

அதி­காரம் என்­பது வரும் போகும். அதே­போன்று அமைச்­சுக்­க­ளுக்­கான அமைச்­சர்­களும் மாறி­மாறி நிய­மிக்­கப்­ப­டு­வார்கள். ஆனால் அரச அதி­கா­ரிகள் தொடர்ந்து அந்த துறையில் பணி செய்­யக்­கூ­டி­ய­வர்கள். அவர்கள் ஒரு­போதும் அர­சியல் வாதி­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக தவ­றான விட­யங்­க­ளுக்கு துணை­போ­கக்­கூ­டாது. அவ்­வா­றான அர­சியல் கலா­சாரம் மாற்­றப்­ப­ட­வேண்டும்.

நான் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக சிறிது காலம்தான் இருந்தேன். என்­றாலும் நான்   அதி­கா­ரி­களை ஒரு­போதும் கேள்­வி­கேட்­ட­தில்லை. மாறாக எனது செய­லா­ள­ரு­டன் அனைத்து விட­யங்­க­ளையும் கேட்­ட­றிந்து, தேவை­யான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டி­ருக்­கின்றேன். அதே­போன்று அதி­கா­ரிகள் யாரும் எனக்கு பந்தம் பிடித்­துக்­கொண்டு செயற்­ப­டவும் இல்லை.

எங்­களால் ஏற்­பட்ட தவ­றுகள் கார­ண­மாக தேர்­தலில் தோல்­வியை சந்­திக்க ஏற்­பட்­டது. எங்­களால் ஏற்­பட்ட தவ­று­களை தற்­போது இனம் கண்­டு­கொண்­டுள்ளோம். அந்த தவ­று­களை திருத்­திக்­கொண்டு மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்கு முயற்­சிப்போம். அர­சாங்­கத்­தினால் விடப்­பட்ட தவ­றுகள் அனைத்தும் இறு­தியில் சஜித் பிரே­ம­தா­சவின் மீது சுமத்­தப்­பட்­டன.  கடந்த ஒரு வரு­டத்தில் பல சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க வேண்­டிய நிலை எனக்கு ஏற்­பட்­டது. ஆரம்­ப­மாக 52 நாள் அர­சியல் நெருக்­கடி. அதன் பின்னர் ஏப்ரல் குண்­டுத்­தாக்­கு­த­லுடன் எனக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட மிகவும் மோச­மான பிர­சாரம், அத­னைத்­ தொ­டர்ந்து எனது தந்­தையின் இழப்பு. தற்­போது தேர்தல் தோல்வி. என்­றாலும் தோல்­வி­களை கண்டு நான் ஒரு­போதும் சளைத்­துப்­போ­ன­தில்லை. 

அதனால் மீண்டும் எமது அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிக்க இருக்­கின்றோம். சஜித் பிரே­ம­தா­ச­வு­டனும் இது­தொ­டர்­பாக கலந்­து­ரை­யா­டினேன். வீடு­வீ­டாக சென்று எமது அர­சியல் வேலைத்­ திட்­டங்­களை தெளி­வு­ப­டுத்தி, புதி­ய­தொரு அர­சியல் கலா­சாரம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வதே எமது நோக்­க­மாகும். அத்­துடன் நான் ஐக்­கிய தேசிய கட்­சியை விட்டு செல்­லப்­போ­வ­தாக செய்­திகள் பரவி இருக்­கின்­றன.  நான் ஒரு­போதும் ஐக்­கிய தேசிய கட்­சியை விட்டு செல்­ல­மாட்டேன். அரச நிறு­வ­னங்­களில் அர­சி­யல்­வா­தி­களின் படங்­களை தொங்கவிடக்கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ் தெரிவித்திருக்கின்றார். இதனை நான் வரவேற்கின்றேன். எமது எதிர்வாதியாக இருந்தாலும் நல்லவிடயங்களை ஏற்படுத் தும்போது அதனை பகிரங்கமாக வரவேற்போம். அதற்காக அவர்களுடன் இணைந்து கொள்ளப்போவதாக அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்றார்.

No comments

Powered by Blogger.