Header Adsஅதாவுல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் - சுமந்திரன்

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா நேற்றையதினம் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் மலையக தமிழர்களை இழிவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி பேசியமை தொடர்பாக கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் அதாவுல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் அவர் இட்டுள்ள பதிவில்,

அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். எமது சொந்தங்களைக் கேவலமாக விளிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

8 comments:

 1. athaulla is an idiots. but maharaja fueling the fire. it was not a live program but a recorded 1 hour prior to the incident. S TV could have omit that segment from the frogrm.

  ReplyDelete
 2. ஐயா, அதாவுள்ளாஹ் மன்னிப்புக் கேடபதா இல்லையா என்பதை அவர் தீர்மானிக்கட்டும்.
  ஆனால் அதைக் கூற உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.முஸ்லிம் விரோத செயல்பாடுகளை தமிழர் சார் அமைப்புகள் அத்தனையும் மேற்கொண்டு பச்சிளம் குழந்தை முதல் வயோதிபர், தொழுகையாளிகள், கர்ப்பவதிகள்,கல்வியியலாளர்கள் என தராதரம் பாராது கொன்று குவித்தமைக்கு யார் மன்னிப்பு கேட்பது?
  யாழ் மக்களை உடுதுதியோடு மட்டும் வெளியேற்றியமைக்கு யார் மன்னிப்பு கேட்பது?
  முஸ்லிம் கிராம எல்லைகளை களவாக கூறு போட்டு கபளிகரம் செய்தமைக்கு யார் மன்னிப்பு கேட்பது?
  முஸ்லிம்களை பேச்சுவார்த்தை மேசையில் தனித் தரப்பாக அங்கீகரிக்க முடியாது என மறுப்புத் தெரிவித்து எமது உரிமையை மறுத்தமைக்கு யார் மன்னிப்பு கேட்பது?
  பள்ளிகளில் சுட்டது என்ன புனிதப் போரா?
  நிறைமாத கர்ப்பினியின் வயிற்றைக் கிழித்து பிள்ளையை வெளியே எடுத்து கல்லில் அடித்ததை வீரப்பரம்பரை என்று வாய்ப் பேச்சில் கூச்சலிடும் கோழைகளே எத்தனை 1000 மன்னிப்புக்கள் கேட்க வேண்டும்?
  மின்னல் நிகழ்ச்சியை முழுமையாக பார்க்காது அதா மீது சேறு பூச நினைப்பதும் இதை வைத்தே அரசியல் பிழைப்பு நடத்தவும் வங்குரோத்து அரசியல் செய்யவும் இதில் குளிர் காயும் சிலர்.ஐயோ பாவம்.

  ReplyDelete
 3. Hon Sumanthiran

  You are asking Mr Athaulla to make an unconditional apologise and I agree with you.

  Where were you when your brother parliamentarian Appapillai Vinayagamoorthy who insulted the entire Muslim community in a similar TV programme a couple of years ago saying that the Muslims are not the citizen of this country thereby we don't have anything to claim in Sri Lanka.you were deaf at that time and now you are showing your ugly face.

  ReplyDelete
 4. நாகரீகமான சிங்கள தமிழ் முஸ்லிம்கள் “தோட்டக்காட்டான்” என்கிற மலையக மக்களை இழிவுபடுத்தும் இனவாத சொல்லை பயன்படுத்துவதை எப்பவோ கைவிட்டு விட்டார்கள். அக்கரைபற்று கலைஞான பூமியின் தலைமகனான மதிப்புக்குரிய அதாவுல்லா அவர்கள் இந்த இனவாதச் சொல்லை சுட்டிக் காட்டியபின்னரும் திரும்ப திரும்ப பயன்படுத்தியதற்காக மலையக மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  .
  -வ.ஐ.ச.ஜெயபாலன்

  ReplyDelete
 5. Hon. Mr. M. A. Sumanthiran MP and Spokesperson TNA.

  Your statement that Former Minister Athaullah should tender an appology to the Up-country Tamils and all the Tamil people is meaningless.
  The "triggering" word was - "Thottakkaaralgal" mentioned by Former Minister A.L.M Athaullah during the interaction at the show. But "The Muslim Voice" wishes to tell you that the Sinhalese people call (both) the Sinhalese and Tamil people living and working in the estates in the up-country and in the South, "WATHUKARA JANATHAWA". The tamil translation which is "Thottakkaaralgal". Therefore your statement that Former Minister Athaullah should tender an appology to the Up-country Tamils and all the Tamil people is meaningless. Let us go back to reality Mr. Sumandiran.
  The first major instance of exclusion was perpetrated against Indian Tamils, also called Hill Country Tamils, Up-Country Tamils or Estate Tamils, since most continued to work on tea plantations, as did their ancestors who came to the country as indentured labourers beginning in the 1830s. The community was denied citizenship within a year of independence spearheaded by the Ceylon Tamil politicians. In an island replete with crosscutting cleavages, caste-conscious Sri Lankan Tamils supported this disenfranchisement, as did local and British businessmen (including tea estate owners) who feared these Tamil labourers, who had voted overwhelmingly against the pro-West and pro–trade UNP in the 1947 general election, would be easily manipulated by the country’s leftist parties. Yet, the UNP representatives’ demands when negotiating with the Indian government regarding the plight of Estate Tamils made clear the extent to which Sinhalese Buddhist ethnocentrism was motivating the island’s position towards minorities, in this instance against longstanding residents who had contributed much to the economy. When the Up-country Tamils were oppressed by your own Ceylon Tamils then, how come you claim NOW that they your (kith and Kin).
  Mr. Sumanthiran, you are doing this for cheap political publicity and gain thinking that the Up-country Tamils will join the TNA to fight the new Gotabaya/Mahinda government. You are hpoefully trying to "POLARIZE" the Tamil votes towrdsa the TNA. NO, the Up-country Tamils like the Muslim Vote Bank have begun to act on their own and will not be willing to me misguided by "OPPORTUNISTIC" tamil/muslim politicians.
  Therefore, there is NO need for an appology by Former Minister A.L.M.Attaullah.
  Once again "The Muslim Voice" feels that it was not an appropriate word to be used and on behalf of Former Minister Atthaullah, "The Muslim Voice" wishes to tender it's appologies to the Up-country Tamils.
  Noor Nizam - Convener "The Muslim Voice".

  ReplyDelete
 6. ஜப்னா முஸ்லிம் எல்லோரது commons யும் பதிவேற்றம் செய்யும் என எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 7. இழிவான வார்த்தை பிரயோகம் என்று சுமந்திரன் தெரிவித்த வார்த்தைப் பிரயோகம் முற்றாக வட மாகாணத்தில் கைவிடபடவில்லை. இன்னும் உலாவருகிறது.ஒரு அரசியல் தலைவராக இருக்கின்ற அதாவுல்லா மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது ஏற்றுகொள்ளகூடியதே.
  ஆனால் மனோ கணேசனும் தனது தவறான நடத்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுமந்திரன் ஏன் கேட்கவில்லை? தெரு சண்டியன் போல அவர் நடந்து காட்டுவது தான் மலையக மக்களுக்காக பாடுபடுகிறேன் என்று காட்டுவதற்காகவா?

  ReplyDelete

Powered by Blogger.