Header Ads



கோத்தாவின் வெற்றிக்கு பின்னால், 
முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும் 
 - மர்ஜான் பளீல் 


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக மாறுவதே காலத்தின் தேவையாகுமென பொதுஜனபெரமுன கட்சியின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் குழுவின் இ​ணைத் தலைவரும் பேருவளை நகர சபை முன்னாள் தலைவருமான  மர்ஜான் பளீல் தெரிவித்தார். 


பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரித்து பேருவளை நகர சபை வேட்பாளர் இபாம் ஸாலி தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
தொடர்ந்து உரையாற்றிய மர்ஜான் பளீல், 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் தர்கா நகர் சம்பவமே பேசு பொருளாக காணப்பட்டதை அனைவரும் அறிவர். இதனை நம்பியே நாட்டிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக வாக்களித்தார்கள். பின்னர் பதவிக்கு வந்த அரசு இந்த நாட்டு முஸ்லிம்கள் விடயத்தில் எப்படி நடந்து கொண்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

தர்காநகர் சம்பவத்துக்கு நடவடிக்ைக எடுப்பதாக கூறிய நல்லாட்சி அரசினால் நடவடிக்ைக எடுக்க முடிந்ததா? இல்லை. இதுவரை நடவடிக்ைகயெடுக்கவில்லை. காரணம் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டுமென நல்லாட்சியில் பதவி வகிக்கின்ற அமைச்சர்கள் ஒருசிலர் மேற்கொண்ட கபட நாடகமே இது. 

இதன்பிறகும் இந்நாட்டு முஸ்லிம்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 
எமது வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ வெற்றிபெற்றதும் தர்கா நகர் சம்பவ சூத்திரதாரிகளை மக்கள் முன்னிலையில் கொண்டு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடமும் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவிடமும் நாம் கேட்டுள்ளோம். 

எமக்கும் தேவை உண்மையான சூத்திரதாரிகள் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் இனங்காணப்பட வேண்டுமென்பதே. 
நல்லாட்சி அரசை நம்பி அதிகமான முஸ்லிம் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான கூடுதலான அசம்பாவித சம்பவங்கள் இந்த ஆட்சியிலே மேடையேற்றப்பட்டன. இதற்கு இந்த அரசு தீர்வு கண்டதா? இல்லை. எமது வாக்குகளினால் அரசினால் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் என்ன செய்ய முடிந்தது என்பதை அவர்கள் நிரூபிக்கட்டும். 


இதுவரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட திகன, கண்டி மற்றும் இன்னோரன்ன பகுதி முஸ்லிம்களின் சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டதா என்பதை மீண்டும் ஒருமுறை வாக்களித்தவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பி ஒருபோதும் எமது சமூகம் செயற்படக் கூடாதெனவும் மர்ஜான் பளீல் இதன்போது தெரிவித்தார்.

2 comments:

  1. அடடா.. இது சூடு கண்ட பூனையா அல்லது ரோசம் கெட்ட பூனையா? இதைத் தான் நபிகள் நாயகம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சருகுகள் என்று சொன்னார்கள்.

    ReplyDelete
  2. INDA UNKNOWN, ORU MUTTAAL MAATHIRI
    THERIKIRATHU.
    NADANDA UNMAIKALAI SHONNAL EN
    UNKNOWN KOPAPPADA VENDUM.
    INSKKU PORUTHAMAANA PEYAR UNKNOWN.

    ReplyDelete

Powered by Blogger.