Header Ads



தயவுசெய்து வாக்களிப்பை தவிர்க்காதீர்கள், அது அபாயகரமான நிலையாகும்

வடக்கின் வாக்காளர்கள், வாக்களிப்பில் இருந்து விலகியிருக்கக் கூடாது என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

கபேயின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளர் மானஸ் மக்கீன் இது தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தில், வடக்கில் சில குழுக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பை தவிர்க்குமாறு கோரிவருகின்றன.

இதனை தவிர்க்குமாறு சில குழுக்கள் பாடசாலைகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்களிப்பு என்பது ஜனநாயக ரீதியில் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடைமுறையாகும்.

இது அபாயகரமான நிலையாகும். ஏற்கனவே வடக்கின் இளைய சமூகம் தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்திருந்தனர்.

இதனால் பாரிய இடர்கள் ஏற்பட்டன. இதனை மீண்டும் ஏற்படுத்த இடம்கொடுக்கவேண்டாம் என்று கபே குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தொகுதியில் 564,714 பேர் வாக்காளர்களாக பதிவுப்பெற்றுள்ளனர். வன்னியில் 282,119 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் 281,114 வாக்காளர்கள் பதிவுபெற்றுள்ளனர். மட்டக்களப்பில் 398,301 வாக்காளர்களும் திகாமடுல்லையில் 503,730 வாக்காளர்களும் பதிவுப்பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.