Header Ads



பாராளுமன்ற உறுப்பினராகிறார் மைத்திரி

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் சாந்த பண்டார பதவி விலகி மைத்திரிக்கு அதற்கான வாய்ப்பை வழங்குவாரென அறியமுடிந்தது.

முன்னதாக டிலான் பெரேரா தனது தேசிய பட்டியல் எம் பி பதவியை இராஜினாமா செய்வாரென சொல்லப்பட்டது.ஆனால் அவர் இறுதி நேரத்தில் தனது முடிவை மாற்றியுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் விடயத்தில் கடும்போக்காக செயற்பட்ட மைத்திரிக்கு பதவிக்காலத்தின் பின்னரும் மேலதிக பாதுகாப்பு வழங்கவேண்டி இருப்பதால் அவரை எம் பியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்மூலம் சட்டப்படி அவருக்கு கூடுதல் பாதுகாப்பை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

3 comments:

  1. சாந்த பன்டார தனது தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து அவருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் சாலிந்த எம். பி. மரனமடைந்த்தைத் தொடர்ந்து சாந்த பன்டார மாவட்ட எம்.பியாகி விட்டார்.

    ReplyDelete
  2. நாட்டைக் கொள்ளையடித்து சூறையாடிப் பழகியுள்ள இந்த சைத்தான்களுக்கு என்ன காரணம் கொண்டும் பதவியை விட்டு வௌியேறமுடியாது பேராசை. நாட்டையும் நாட்டு மக்களின் சொத்துக்களையும் கொள்ளையடித்து சுரண்டி உண்டு வாழப்பழகியுள்ள இந்த கொள்ளைக்காரன்களை நாட்டை விட்டும் துரட்சி பண்ண நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு பாடுபடவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.