Header Ads



முஸ்லிம்களை அமைச்சர்களாக நியமிக்காமைக்கு, இனச்சாயம் பூச வேண்டாம் - அலி சப்ரி

- AAM. Anzir -

ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் ஜாதி, பேதம் பார்த்து அமைச்சரவை நியமிக்கப்படவில்லை. முஸ்லிம்கள்  அமைச்சர்களாக நியமிக்கப்படாமைக்கு எவ்வகையிலும் இனச்சாயம் பூச்சாதீர்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இணையத்திற்கு தகவல் வழங்கிய, அலி சப்ரி மேலும் கூறியதாவது,

இன்று வெள்ளிக்கிழமை (22) புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. மூத்த அரசியல்வாதிகள் என்ற அடிப்படையில் அமைச்சர் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை, ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதில் சிலவேளை முஸ்லிம்கள் நியமிக்கப்படலாம்

தற்போதைய அரசாங்கமும், அமைச்சரவையும் இடைக்காலத்திற்கானது. 50 அமைச்சர்களை நியமிக்க முடியாது. தற்போது சுதந்திரக்கட்சி சார்பில் முஸ்தாபாவும், மஸ்தானும் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளமையை நாம் கவனத்திற் கொள்ள வேண்டுமெனவும் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டார்.

5 comments:

  1. THERE IS GOING TO BE LOT OF MUSLIM LEADERS WHO ARE GOING TO BE ADMITTED TO COLOMBO HOSPITALS WITH CHEST PAIN AND HEART ATTACK-WHERE IS FISAR MUSTHAPA? IS HE MISSING IN ACTION?

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் இந்த கோட்டாவுக்கு வாக்களிக்கவில்லை, எனவே எதிர்பார்பதும் தவறாகும்.

    கோட்டா தமிழ்ரகளுக்கு எதிரானவர் அல்ல என்று மேற்கு நாடுகளுக்கும் இந்தியாஙுக்கும் காட்டவே தமிழ் அமைச்சர்கள் நியமிக்கபட்டுள்ளனர். மற்றம்படி வாக்களிக்காதவர்களுக்கு பிரதினித்தவம் கொடுப்பது ஜனநாயகம் இல்லை

    ReplyDelete
  3. பெரும்பாண்மை மக்களிடம் எதைச் சொல்லி வெற்றி பெற்றார்களோ அதையே செய்துள்ளனர்,மற்றப்படி எந்தச் சிறுபாண்மையினருடனும் பாசமும் இல்லை வெறுப்பும் இல்லை பெரும்பாண்மை மக்களைத் திருப்திப் படுத்தவே இந் நடவடிக்கை. இதனால் முஸ்லீங்களுக்கு நன்மையே தவிர தீமையில்லை.

    ReplyDelete
  4. GOOD LESSON IS OUR DEFENCE FROM ALMIGHTY ALLAH.WE DONT BELEIVE ANY OTHERS.THIS IS THE LESSON OF THIS ELECTION.

    ReplyDelete

Powered by Blogger.