Header Ads



"சில தினங்களில் பல, தந்திர செயல்களை எதிர்பார்க்க முடியும்" - விமல் வீரவன்ச

நாட்டின் தலைவருக்கோ அல்லது பிரதமருக்கோ மாத்திரமே தேசிய கொடிக்கு முன்நின்று உரை நிகழ்த்த முடியும். எனவே நேற்றையதினம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாக தேசிய கொடிக்கு முன்நின்று உரையாற்றியமை பிழையான விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் -08- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகளையும் சஜித் பிரேமதாச ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு ஏற்றுக்கொண்டதன் பொருட்டு யாழ். பல்கலைக்கழக ஒன்றிய மாணவர்கள் 3 மாத காலக்கெடுவை கொடுத்துள்ளனர்.

அந்தக் காலக்கெடுவின்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வீதிக்கு இறங்கி போராடுவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அவர்கள் ஏன் சஜித்துக்கு மாத்திரம் அவ்வாறு கூறுகின்றார்கள். அவர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாலேயே ஆகும்.

நாங்கள் அவ்வாறு ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவ்வாறு அவர்கள் எங்களிடம் கூறவில்லை. எதிர்வரும் சில தினங்களில் பல்வேறுபட்ட தந்திர செயல்களை எதிர்பார்க்க முடியும்.

கோத்தபாயவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மக்கள் நம்பவே மாட்டார்கள்.

சஜித் பிரேமதாச சிறுபிள்ளைத் தனமாக செயற்பட்டு வருகின்றார். எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் ஜனாதிபதியாக அவருக்கு முடியாமல் போகும் என்பதை அறிந்து முன்கூட்டியே நாட்டின் தலைவராக நாட்டு மக்களுககு உரையாற்றினார்.

நாட்டின் தலைவருக்கோ அல்லது பிரதமருக்கோ மாத்திரமே தேசிய கொடிக்கு முன்நின்று உரை நிகழ்த்த முடியும்.

இது அவரது உரையாற்றியமை பிழையான விடயமாகும். இது குறிதது நாம் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப் போகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. இவரை சி ஐ டி விசாரித்தால் திட்டங்கள் என்ன அன்று அறிந்துகொள்ளலாம்.

    ReplyDelete
  2. Ivar solvathai unmai ena nampum kooddam irukkirathuthaney.?Perumpaanmai aanavarkal ivarai puram thllinal?16 thethiyil athu therinthu vidum

    ReplyDelete
  3. This bullshit is suffering from psychological numbness a medical condition caused by drinking father's kasippu earlier

    ReplyDelete

Powered by Blogger.