Header Ads



கல்முனை விவகாரத்தில், ரணில் ஏமாற்றி விட்டார் - கோடீஸ்வரன்

ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை எங்களை ஏமாற்றி விட்டார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை ( 29) நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வீரச்சோலை அ.த.க. பாடசாலைக்கு ஒலி பெருக்கி சாதனங்களை பண்முக படுதப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

வடகிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கரத்திலே பாரபடுத்திய விடயம் என்னவென்றால், இன பிரச்சினைக்கான தீர்வு, இன பிரச்சினைக்கான தீர்வினை நாங்கள் உடனடியாக தீர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கான செயற்பாடுகள் என்னவென்று அறிந்து தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்னெடுக்க தேசியத்தில் மாத்திரமல்லாது சர்வதேசத்திலும் முன்னெடுத்து வருகின்றோம். முன்னெடுத்து கொண்டே இருப்போம்.

தமிழர்களின் இன பிரச்சினை சார்ந்த விடயங்களை தீர்ப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர எந்த கட்சியும் முன்னிக்க போவதில்லை. அது ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி,ஸ்ரீ லன்கா பொதுஜன பெரமுன கட்சியாக இருந்தாலும் சரி, ஏன் இப்போது முளைத்த புதிய கட்சியானலும் சரி தமிழர்களின இன பிரச்சினை சார்ந்த விடயங்களில் ஒரு போதும் முன்னிக்க போவதில்லை. என்றும் முன்னின்ற சரித்திரமும் இல்லை.

வட கிழக்கில் ஏக பிரதிநிதியாக இருக்கும் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பே தமிழர்களின் பலம் என்பதனை தமிழ் மக்கள் ஒரு போதும் மறந்துவிட கூடாது. தேசியத்தில் மட்டுமல்லாது சர்வதேசத்திலும் தமிழர்களின் குரல்லாக ஒலித்து கொண்டிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதனை தமிழ் மக்களாகிய நீங்கள் ஒரு போதும் மறந்துவிட கூடாது.

எப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைக்க படுகிறதோ ,சின்னாபின்ன படுத்த படுகிறதோ, அன்று தமிழர்களின் உரிமை குரல் நசுக்க படும் தமிழர்களின் ஒற்றுமை சின்னாபின்னமாக்கப்படும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயம் சம்பந்தமாக, நாங்கள் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தோம். அதன் மூலம் தேசிய ரீதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை நாங்கள் வெளி உலகத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம். கடந்த காலத்திலே பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகள், முயற்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டது. அந்த முயற்சிகள் ஏனைய சமூகத்தவர்களினால் அது பின்தள்ளப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியானது ஒவ்வொரு கால கட்டத்திலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவோம் என்று பல வாக்குறுதிகளை தந்தது, பல ஒப்பந்தங்களை செய்தது எங்களை ஏமாற்றி விட்டது ஐக்கிய தேசிய கட்சி. ஐக்கிய தேசிய கட்சியன் முன்னாள் தலைவர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை எங்களை ஏமாற்றி விட்டது.

ஐக்கிய தேசிய கட்சி எப்படி தமிழ் மக்களை ஏமற்றியதோ அதே போன்று தற்போது ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியும் ஏமாற்றி வருகிறது. எப்படி இருந்தாலும் நாங்கள் தொடர்ச்சியாக கல்முனை பிரதேச செயலக விடயம், அம்பாறை மாவட்ட தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க கடைசிவரை போராடுவோம் என்றார்.

No comments

Powered by Blogger.