மேடைக்குச் செல்ல திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு - பாதுகாவலர்கள் துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் காயம்
நாவலபிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரச்சார மேடைப் பகுதிக்கு திசாநாயக்கவை நுழைய விடாமல் சில தரப்பினர் தடுத்து நிலையில் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது அவரின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்த நிலையில், பாதுகாவலர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் மாற்று கட்சியின் ஆதரவாளர்கள் 2 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவர் சிறீலங்கா அரசியலுக்கு முற்றிலும் பொருத்தமற்றவர்
ReplyDelete