'அரசாங்கம் அமைந்து 10 நாட்களே ஆகின்றன, எதிர்க் கட்சித் தலைமையை தீர்மானிக்க ஏன் அவசரப்படுகின்றீர்கள்
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவிதப் பிளவும் இல்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை, அடுத்து வரும் நாட்களில் அதனை நாம் தீர்த்துக் கொள்வோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“அரசாங்கம் அமைத்து இன்னும் 10 நாட்களே ஆகின்றன. எதிர்க் கட்சித் தலைமையை தீர்மானித்துக் கொள்ள அவசரம் ஏதும் இல்லை. ஏன் அவசரப்படுகின்றீர்கள் எனவும்” அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படித்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு இப்போது தானே திகதி வைத்திருக்கிறார்கள்.வேட்பாளர் தெரிவுக்கு ஏன் அவசரம் என்று கேட்டுக் கேட்டு தேர்தல் நெருங்கி ஸஜித்தை வேட்பாளராக்கி தொற்கடித்தீர்கள்.இதைத் தானா மீண்டும் செய்யப் போகிறீர்கள்?
ReplyDelete