Header Ads



ஹமீத் முனவ்வரின் நூல் லெஸ்டரில் வெளியீட்டு வைப்பு - NM அமீன் பிரதம அதீதியாக பங்கேற்பு


பிரித்தனியாவில் வசிக்கும் மாவனல்லையைச்சேர்ந்த ஹமித் முனவ்வர் எழுதிய விஞ்ஞானத்துக்கு அப்பால் ஒளி என்ற மும்மொழி மூலம் அண்மையில் லெஸ்டர் நகரில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் அஷ்ஷெய்க் சல்மான் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில், முஸ்லிம் ஸ்ரீலங்கா முஸ்லிம் போரத்தின் தலைவர் என்.எம். அமீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நூலின் அறிமுக உரையை முன்னாள் லேக்ஹவுஸ் ஊடகவியலாளர் முஹம்மத் ஹிஷாம் நிகழ்த்தினார். இந்த நூலை வாசிக்கும் எவருக்கும் இலகுவில் நூலை புரிந்துகொள்ளக்கூடிய இறைவனின் அபார ஆற்றலை எடுத்து விளக்குகிறார். நூலிலே குர்ஆனை ஆதாரமாக காட்டி நூலாசிரியர் இன்றைய விஞ்ஞானக்கண்டு பிடிப்புகளை விளக்கி எழுதியுள்ளார். 21ஆம் நூற்ராண்டில் வாழும் எமது சிந்தனை விஞ்ஞானம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் விஞ்ஞானத்திற்கு சவால் விடும் அல் குர்ஆன் என்பதனை தெளிவாக எழுதியுள்ளார்.

பிரதம அதிதி என்.எம்.அமீன் இங்குரையாற்றுகையில்,

 குர்ஆன் மகிமையை எடுத்து விளக்கும் வகையில் நூலாசிரியர் முனவ்வர் நூலை எழுதியுள்ளார். இஸ்லாத்தின் மகிமையை முஸ்லிம் அல்லாதோருக்கு எடுத்துக்காட்டும் வகையில் பல நூல்களை வெளியிட்டு வரும் சகோதரர் முனவ்வர் குறிப்பாக முஸ்லிம் அல்லாதோருக்கு இஸ்லாத்தின் மகிமையை எடுத்துக்கூறும் பணியில் ஈடுபட்டு வருகிறார். உடற் பலவீனம் இருந்த போதும் அதனை கவனத்திற்கொள்ளாது பலவீனமின்றி வாழும் பலருக்கெல்லாம் முன்மாதிரியாக நான்கு நூல்களை எழுதியுள்ளார்.

கொழும்பிலே இந்த நூல்களை நாம் வெளியிட்டு வைத்தோம். இன்று நாம் லெஸ்டர் நகரில் இங்கு வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு பிரசன்னத்துடன் வெளியிட்டு வைப்பது இந்த நூலாசிரியரின் உயர்பணிக்கு அளிக்கும் கௌரவமாகும்.

 முன்னாள் தினகரன் ஊடகவியலாளர் எச்.எம். பதியுதீயுஸ் ஸமானும் இங்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


No comments

Powered by Blogger.