Header Ads



கோத்தபாய - ஹிஸ்புல்லா புகைப்படத்தை இணைத்து ஊடகங்களில் வெளியிடுகின்றமை உண்மைக்கு புறம்பானது

கோத்தபாய ராஜபக்ச மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் புகைப்படத்தை இணைத்து சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானது என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம் என அறிந்துக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயகத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் நிராகரிக்க வேண்டும்.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனவும் டளஸ் அழகப்பெரும தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Hisbulla is SLFP member and he is still in the executive committee. SLFP supporting your party and why are you rejecting him? Is there any political motivation behind it? Are you worrying about Sinhalese voters? Then do not ask muslims to support you.

    ReplyDelete

Powered by Blogger.