Header Ads



ஐ.தே.க காணாமல் போனது போல, சஜித்தும் காணாமல் போவார் - லக்ஷமன் யாப்பா

சஜித் பிரேமதாசவின் தலைமையில் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பாரிய தோல்வியை சந்தித்தது போல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

திக்வெல பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். 

கடந்த 2010 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் சுமார் 18 இலட்சம் வாக்குகளை பெற்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதாகவும் அவர் தெரிவித்தார். 

2011 ஆம் ஆண்டு தமது அரசாங்க காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தியதாக தெரிவித்த அவர், அப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க கடமையாற்றியதாகவும் கூறினார். 

அந்த சந்தர்ப்பத்திலும் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 35 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். 

அதேபோல் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஐ.தே.கவின் மக்கள் விரும்பும் வேட்பாளர் என தெரிவிக்கப்படுபவரால் 24 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தாகவும் அவ்வாறே ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கோட்டாபய ராஜபக்ஷ தென் மாகாணம் உள்ளிட்ட வேறு பல மாகாணங்களில் 70 வீத வாக்குகளை பெறுவது உறுதி எனவும் இலங்கை வரலாற்றில் பாரிய இடைவெளியில் அவர் வெற்றிப் பெறுவர் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

எல்பிட்டிய தேர்தலில் வெற்றிப்பெற மக்களுக்கு பல்வேறு பொருட்களை வழங்கியதாகவும் அவற்றை பெற்றுக் கொண்டு வாக்களிக்க மக்கள் முட்டாள்கள் இல்லை எனவும் அவர் கூறினார். 

´எல்பிட்டிய தேர்தலில் ஐ.தே.க காணாமல் போனது போல் சஜித்தும் காணாமல் போவார்´ என தெரிவித்த அவர் ரணில் மீண்டும் எதிர்க் கட்சித் தலைவர் ஆவார் என்பதுடன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவார் எனவும் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. Day dreaming...shangrila wedding famous ....sudawela.

    ReplyDelete

Powered by Blogger.