Header Ads



தனித்து விடப்பட்டவராக மைத்திரி

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ளவர்கள் பலர் எதிர்ப்பை வெளியிடுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைதவிர தமது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தருமாறு மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டபோது, மைத்திரிபால தம்மை சுயாதீனமான காட்டும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகினார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மத்தியில் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. மைத்திரிபாலவின் இந்த முடிவு முழுமையான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாக்குகளை தமக்கு பெற்றுத்தராது என்பது மஹிந்த தரப்பின் வாதமாக உள்ளது.

இந்த நிலையில் மைத்திரிபால தற்போது தனித்துவிடப்பட்டவராக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி அடுத்து வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு 31 வீத இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

2 comments:

  1. அது மட்டுமல்ல,இந்த நாட்டு மக்களின் சாபத் தையும், கடு மையான எதிர்ப்பையும் பெறுவதற்கு இவர் இன்னம் கொஞ்சம் பொறுக்கவேண்டும்.அப்போது இந்த நாட்டில் மூளையில்லாத அவரைப் போன்ற மக்கள் அனைவரும் கள்வர்கள் அல்ல என்ப தை இந்த நாட்டுமக்கள் விரைவில் செயலில் காட்டுவார்கள்.

    ReplyDelete
  2. பதவி வெறி மைத்ரீயின் கண்ணை மறைத்தது...
    பட்டமும் பதவியும் நிரந்தர மானதல்ல
    மைரீக்கு ஓட்டு போட்டதற்காக வருந்துகிறோம். ..

    பிரதமரையும் ஏமாற்றி விட்டார்? ???

    ReplyDelete

Powered by Blogger.