Header Ads



சு.க.யின் தலைவராக சந்திரிக்கா, செயலாளராக குமார...??

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதும் கட்சியின் பொதுச் செயலாளராக குமார வெல்கமவை நியமிக்க வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி முடிவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான இந்த நியமனங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பேசப்படுகிறது.

17 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்க்கட்சியாக இருந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை கடந்த1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவே ஆட்சி பீடம் ஏற்றினார். அதனை தொடர்ந்தும் 20 ஆண்டுகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசாங்கங்களே இலங்கையில் ஆட்சியில் இருந்தன.

No comments

Powered by Blogger.