Header Ads



முஸ்லிம்களாகிய நாங்கள் குதூகலிக்க, அப்படி என்னதான் நமக்கு சுபசோபனம் இறங்கிவிட்டது...?

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி அபேட்சகராக தெரிவு செய்யப்பட்டதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள ஆதரவாளர்கள் வேண்டுமானால் கொண்டாடிக் குதூகலிக்கலாம். ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் இப்போது கொண்டாடிக் குதூகலிக்க அப்படி என்னதான் நமக்கு சுபசோபனம் இறங்கிவிட்டது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டபோது , நாங்கள் வெடில் கொளுத்தி,பாற்சோறு பகிர்ந்து நாம் அடைந்த சந்தோசத்தையும் நிம்மதியையும் விடவா இப்போதைய நமது குதூகலிப்பு? அன்றைய நமது குதூகலம் எவ்வளவு நாட்களுக்கு நீடித்தது?

எம்மைப்பொறுத்தவரை இரண்டுமே விஷம்தான்.

ஒன்று அன்றே கொல்லும்...!
ஒன்று நின்று கொல்லும்...!

ஆனாலும் ,

தனது ஜனாதிபதிக் கனவை இலக்கு வைத்து சிங்கள,பௌத்த இனத்தின் காவலராக தன்னை அடையாளப் படுத்துவதற்காக சிங்கள,பௌத்த பேரினவாதத்தை போஷித்து வளர்த்தெடுத்து அதனை முஸ்லிம் சமூகத்துக்கெதிராக ஏவிவிட்டு இன்று வரையும் அதற்கு பக்கபலமாக இருக்கின்ற சக்திகளின் கைகளுக்கு எம்மை இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஆட்சிசெய்வதற்கான அதிகாரம் சென்றுவிடக்கூடாது என்பதை மாத்திரம் கருத்தில் கொண்டே இந்தத் தேர்தலில் நாம் வாக்களிக்கப்போகும் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும்.

மாறாக இவர் வந்தால் நமக்கு பாலாறும், தேனாறும் பாய்ந்தோடும் என்று மட்டும் நம்பி யாருக்கும் வாக்களித்து ஏமாற வேண்டியதில்லை.

ஆகவே வாக்களிப்போம்!

இவர் வெல்ல வேண்டும் என்பதற்காக அல்ல!

அவர் வென்றுவிடக்கூடாது என்பதற்காக வாக்களிப்போம்!

- Mohamed Rizvi -

2 comments:

  1. ஜே வி பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் கருத்து வெளியிட்டது போல திகன யிலும் அளுத்கமயிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது வாய் திறக்காத இவர் மீன்டும் ஒரு முறை முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்னை பொருத்தமட்டில் கடந்த இரண்டு ஆட்சிகளுக்கும் இவரது ஆட்சிக்கும் மத்தியில் எந்தவித வேறுபாடும் இருக்கப்போவதில்லை இவரது கடந்த கால நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக அவதானித்தால் இவர் யார் என்பது மிகத்தெளிவாக தெரிந்து விடும் எம்மவர்கள் மிகச்சாதுரியமாக தீர்மானம் எடுப்பதில்தான் எமது பாதுகாப்பு தங்கியுள்ளது அனைத்துக்கும் அழ்ழாஹ் போதுமானவன்

    ReplyDelete
  2. but we should know how to support lesser evil in time of competing two evils and to support most good persons when two good persons are competing. so, consider the reality of life. JVP will not get public support to form a government. that is a fact, We all love to see them but will Sinhalese vote them. I doubt about it. now come to compare these two personalities and vote what is good for our community? is it UNP or is it SLFP or Is it SLPP. Think wisely and use your votes in a most useful manner.

    ReplyDelete

Powered by Blogger.