Header Ads



அடிப்படைவாத மத அமைப்புக்கள் நாட்டுக்கு பொருத்தமானதல்ல, அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்

இந்நாட்டில் சமய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனை ஏற்படுத்த வேண்டிய ஒரு யுகத்தில் நாம் உள்ளோம் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சமூகம் அச்சத்தில் உள்ளது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். தீவிரவாத குழுக்களை நாம் ஓதுக்க வேண்டும். அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

அடிப்படைவாத மத அமைப்புக்கள், அந்த சிந்தனையிலுள்ள எந்தவகையான அமைப்புக்களாக இருந்தாலும் அது ஒரு நாட்டுக்கு பொருத்தமானது அல்ல. இதுபோன்ற அடிப்படைவாதம் நாட்டில் உருவாக இடமளிக்கக் கூடாது எனவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார். Dc

5 comments:

  1. ஆட்சியும் அதிகாரமும் இல்லாமலேயே முஸ்லிம்களை அழிக்கவும், அவர்களின் சொத்துக்களைச் சூறையாடி இல்லாமலாக்கவும் திட்டமிடுகின்றான் இந்த இனத்துவேசி. பேருவலை உற்பட மற்றும் நாட்டின் சில பகுதிகளில் உள்ள முஸ்லிம் என தாங்களை அழைத்துக்கொள்பவர்கள் இந்த துவேசிக்கு வாக்களிக்கத் தயாராகின்றனர். இவ்வளவு எழுதியும்பேசியும் தடைகளை விதித்தபின்னவரும் கால்பேசில் முகத்தை மூடிக்கொண்டு திரியும் இந்த சோனக கூட்டம் அதற்கு மேலும் முன்னேசென்று அவர்களின் அழிவுக்கு அவர்களே வித்திட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  2. NEENAGALE MEGA ADIPPADA GROUP.

    ReplyDelete
  3. அதென்றால் சரி தான். பொதுபலசேனா, ஜாதிக ஹெல உருமய, சிங்ஹல ராவய, ராவன பலய, சிங்ஹலே .................... இப்படியாக நீண்டு செல்லும் அடிப்படைவாதங்கள் உட்பட என்கின்ற கருத்து இருந்தால் ஆயிரம் முறை சரி, சரி என்று சொல்வோம். ஆனால் உங்கள் மூளையில் வேறு எதுவோ உதிக்க உதடு மட்டும் அழகான ஜாலத்தை உமிழ்கின்றது எமக்கு நன்றாகப் புரிகின்றதே முன்னாள் மூத்தவரே!

    ReplyDelete
  4. Thirudan never tells "I am a thief". We have to understand ourselves. 02 - Whats fundamentalism? Editor, Jaffna Muslim, please explain whats that?

    ReplyDelete

Powered by Blogger.