Header Ads



எனக்கு எவரும் பாடம் சொல்லித்தரத் தேவையில்லை, நான் சின்னப்பிள்ளை அல்ல - சஜித்

சஜித் பிரேமதாஸ

புதிய அரசமைப்பின் ஊடாக பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பேன். அதேவேளை, வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் கவனம் செலுத்துவேன். இந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

எனக்கு எவரும் பாடம் சொல்லித் தரத் தேவையில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுவிட்டேன். நான் சின்னப்பிள்ளை அல்ல. இந்த நாட்டை ஆட்சி செய்த ரணசிங்க பிரேமதாசவின் மகனே நான். ஏழை மக்களின் தோழனும் நானே. எனது தந்தையின் வழியில் பயணிப்பேன்.

எந்தத் தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன். மிரட்டல்களுக்கு அடிபணியவே மாட்டேன். எனவே, இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின மக்களும் என்னை நம்பி வாக்களிக்கலாம்.

நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளாமல்தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன். இந்த நாட்டை முன்னேற்றும் வகையிலான பொதுக் கொள்கைத் திட்டத்தின் கீழ் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன்.

சிறுபான்மை இன மக்கள் என்னில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை வேண்டி அந்தக் கட்சிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நான் சந்திக்கவுள்ளேன்.

ஆனால், இந்தச் சந்திப்புக்களின்போது எழுத்துமூல உத்தரவாதங்கள் எதனையும் நான் வழங்கவேமாட்டேன். அதேவேளை, உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடமாட்டேன். எனது பொதுக் கொள்கைத் திட்டத்தை சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களிடம் தெளிவுபடுத்துவேன். நாட்டின் எதிர்கால நலன் கருதியே எனது பொதுக் கொள்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ.

1 comment:

  1. அதுதான் Isis யுடன் கூட்டு வைத்த வைத்தீர்களாக்கும்

    ReplyDelete

Powered by Blogger.