Header Ads



கோத்தபாய ஜனாதிபதியாளால்,மைத்திரிக்கு சபாநாயகர் பதவியா...?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றினால் புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ம் திகதி சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளிடையே நடத்தப்பட்ட சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, புதிய அரசாங்கத்தில் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் யோசனை ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Athu ellam michcham. Pradesasaba uruppinar padavi koduppom.

    ReplyDelete

Powered by Blogger.