Header Ads



ஜனாஸா தொழுகைக்கு அனுமதி மறுத்தமைக்காக, மாதம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது

மாதம்­பிட்டி ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழு­கை­யொன்று நடாத்த அனு­மதி மறுக்­கப்­பட்ட நிலையில் பள்­ளி­வாசல் வளா­கத்­தி­லுள்ள பாலர் பாட­சா­லையில் குறிப்­பிட்ட ஜனாஸா தொழுகை நடத்­தப்­பட்­ட­தாக கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்­துக்கு முறைப்­பாடு கிடைத்­த­தை­ய­டுத்து கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் விசா­ர­ணை­யொன்­றினை நடாத்­தி­யது.

அறி­யாமல் செய்த இந்த தவ­றுக்கு சம்­பந்­தப்­பட்ட மஸ்ஜித் நிர்­வாகம் ஜனா­ஸா­வுக்கு உரிய குடும்ப அங்­கத்­த­வர்­க­ளிடம் மன்­னிப்புக் கோரி­ய­தாக கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

நடை­பெற்ற விசா­ர­ணையில் பாதிக்­கப்­பட்ட ஜனா­ஸா­வுக்கு சொந்­த­மான குடும்ப உறுப்­பி­னர்­களும், பள்­ளி­வாசல் நிர்­வாகம், கொழும்பு வடக்கு மஸ்ஜித் சம்­மே­ள­னத்தின் தலைவர் மொஹமட், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
இது தொடர்பில் அஸ்லம் ஒத்மான் கருத்து தெரி­விக்­கையில், இவ்­வா­றான சம்­ப­வங்கள் இதன்­பி­றகு கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெ­றா­தி­ருப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். அத்­தோடு நாட­ளா­விய ரீதியில் எந்தப் பள்­ளி­வா­ச­லிலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் தவிர்க்­கப்­பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மாதம்பிட்டி பள்ளிவாசலில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு 3 ஆம் தரப்பே காரணமாக இருந்துள்ளது என்றார்.


6 comments:

  1. Athu Enna 3 aam tharappu?

    ReplyDelete
  2. Muttal thanam than Karanam endru sollalam thane

    ReplyDelete
  3. மூன்றாம் தரப்பு என்றத விட 3ம் வகுப்பு சொல்லுங்கள் என்று

    ReplyDelete
  4. நீங்க எல்லாம் எந்த குறூப் டா? சிறிய பிழைகளுக்கும் தவறுகளுக்கும்தான் மன்னிப்பு. ஒரு முஸ்லிம் வபாத் ஆனா பள்ளிக்கு கொண்டுபோய் தொழுவிக்க வேண்டியதுதானே. அதுக்கு என்னடா சட்டம் பேசுறீங்க. இந்தப் பெரிய அநியாயத்தை எவ்வாறு மன்னிக்க முடியும். இந்த துஆக்களுக்கான பெறுமதியினை அறியாத இந்த மடையர்களை எப்படி சமூகம் பள்ளி நிர்வாகத்தில் வைத்துள்ளது. இதற்குரிய ஒரேஒரு தண்டனை பள்ளியின் தலைவர் செயலாளர் பொருளாலர் என்னைக்கோ ஒருநாள் வபாத் ஆவார்கள்தானே. அந்த மையித்துகளை பள்ளியில் வைத்துத் தொழவைக்கக்கூடாது. மூன்றாம் தரப்பாம் நான்காம்; தரப்பாம். ஏன் ஐந்தாம் தரப்பு வரவில்லையா?

    ReplyDelete
  5. அமீர்சாப்பும் தப்லீக் ஜமாத்காரார்ஹளுந் காரார்ஹளும் முக்கியமான மஷூராவில் இருந்தார்கலாம் அதுதான் மைய்யித்தை வெளியில் தொழ சென்னார்களாம்

    ReplyDelete
  6. PAKKATHIL PALA PALLIKAL IRUKKA,
    PIRACHINAI EDUKKAVA ANDA PALLIKKU
    JANAZAVA KONDUPONEENGA.
    NALEEMIKKU MARKAM THERIUM THANEY.
    NATKUNAM, NIZAANAM, RASOOLULLAHVIN
    POZANAIKAL.
    JAMATH ISLAMI ALLA

    ReplyDelete

Powered by Blogger.