Header Ads



பாலியல் பற்றிய அடிப்படை கல்வியைப் போதிக்க 'ஏழாம் ஆண்டு எமது புத்தகம்'

(நா.தனுஜா)

வளரிளம் பருவ வயதை அடைந்துள்ள மாணவர்களில் ஏற்படும் எண்ணங்கள், நடத்தைகள், மனப்பாங்கு உள்ளிட்ட மாற்றங்களை சிறப்பாக எதிர்கொள்வதற்கும் ஆண், பெண் சமூகம் பற்றிய யதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கும் ஏற்புடைய வகையில் அவர்களுக்கு பாலியல் நடத்தைகள் தொடர்பான அடிப்படைக்  கல்வியைப் போதிக்கும் நோக்கில் சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து 'ஏழாம் ஆண்டு எமது புத்தகம்' என்ற நூலை வெளியிடும் நிகழ்வு அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது.

ஆரோக்கியமான இளைய தலைமுறையினரே நாட்டின் பெறுமதி வாய்ந்த வளம் என்ற அடிப்படையில் அவர்கள் அறிவையும், திறமையையும் முழுமையாகப் பெறுவதற்கும், சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும், நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள குடிமகனாக வளர்வதற்கும் அவர்களுக்கு வழிகாட்டும் நோக்கிலேயே இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.