Header Ads



எந்த சவாலுக்கும் முகம்கொடுக்க நான் தயார், நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் பழிவாங்கல் - ரிஷாத்


தனக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தான் தயாராகவுள்ளதாக, கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தான் குற்றம் செய்திருப்பின் பொலிஸ் மா அதிபரிடம் முறையிடுமாறும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. 

அதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லைக்குள் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று உறுதியான பின்னரும், தன்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின் அது அரசியல் பழிவாங்கல் எனவும் எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க நான் தயார் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.