சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் போட்டியிடுவாரோ என சந்தேகம் எழுந்துள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி சுதந்திரக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவாரோ என்ற சந்தேகம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் ஏதேனும் ஓர் இணக்கப்பாடு இருக்கின்றது என்றே தென்படுகின்றது.
நிசாந்த முத்துஹெட்டிகம ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் என்பதனால் அவரது கருத்துக்களை முழுமையாக உதாசீனம் செய்து விட முடியாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment