Header Ads



பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது -

பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்காக சபாநாயகர் பதவியை விலகி, அவைத் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நோக்கில் இயங்கி வரும் சில ஊடகங்கள் இவ்வாறு போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பிரச்சாரங்களை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தாம் சிறியவன் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

பதவி விலகிச் செல்வதனால், வீட்டுக்குச் செல்வனே தவிர வேறு பதவி ஏற்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.