சஜித்திற்கு ஆதரவான மங்களவின் கூட்டத்தை, நிறுத்த ரணிலின் ஏற்பாட்டில் இரவு விருந்து
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக நிதி அமைச்சர் மங்கள சமரவீ மாத்தறை நகரில் மக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அன்றைய தினம் மாலை ஐக்கிய தேசிய ககட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
சஜித் மற்றும் மங்களவின் கூட்டத்தை குழப்பும் வகையில் பிரதமர் அந்த விருந்தை நடத்தியுள்ளதாக ஒரு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த விருந்து பிரதமரினால் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக நடத்தப்படுவதாக பிரதமரின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் கட்சி உறுப்பினர்கள், சஜித்தின் கூட்டத்தில் கலந்துகொள்வதனை குறைத்து கொள்வதற்காக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சஜித் தரப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாக கூறி அலரி மாளிகையினுள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருந்திற்கு குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வருமாறு ரணில் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment