சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால், பதவி விலகுவோம் - சம்பிக்க, ராஜித்த மிரட்டல்
அமைச்சர் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தும் கூட்டணி மற்றும் கட்சி அங்கத்துவத்தில் இருந்தும் விலகப்போவதாக அமைச்சர்கள் ராஜித்த சேனாரத்ன , சம்பிக்க ரணவக்க ஆகியோர் பிரதமர் ரணிலிடம் நேற்றிரவு -01- அறிவித்து விட்டதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் இந்த இழுபறி நிலைமை அரசின் பங்காளிக் கட்சிகளுக்கு பெரும் தர்மசங்கடத்தினையும் நெருக்கடியினையும் தோற்றுவித்துள்ளது.
இதனால் ஐந்தாம் திகதி அறிவிக்கப்படவுள்ள அரசியல் கூட்டணியில் ஐ தே க பங்காளிக் கட்சிகள் கைச்சாத்திடும் வாய்ப்பு அருகிவருவதாக சொல்லப்பட்டது . tamilan

சம்பிக்க பதவி விலகுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவனை மகிந்த கூட்டனியும் ஏற்றுக்கொள்ளாது.
ReplyDeleteஅப்போ சஜித்தை போடாவிட்டால் மிக மிக இலகுவாக மஹிந்த அணி வெற்றி பெறும்,எனவே Muslim கள் சார்பான கட்சிகள் UNP யுடன் இணைவது பற்றி பல முறை சிந்தித்து செயல்படவும்.
ReplyDelete