Header Ads



ஜனாதிபதித் தேர்தல் பற்றி நாம் அவரசப்பட வேண்டியதில்லை, முதலில் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கட்டும்

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என்பதை ஆராய வேண்டும். அதன்பின்னர் அந்த வேட்பாளர்கள் தமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலன் சார்ந்து முடிவெக்க முடியும்"  என்றார்.

1 comment:

  1. Sir, எந்த வேட்பாளரை ஆதரிப்பது சிறந்தது என்ற முடிவை எடுப்பதற்கு முன்னர் முஸ்லிம் கட்சிகளையும் கலந்துரையாடி முடிவெடுப்பின் முஸ்லிம் சமூகத்திற்கு தாங்கள் செய்யக்கூடிய பெரும் உதவி என்றே நினைக்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.