Header Ads



ரணிலா? கருவா? சஜித்தா? என்ற போட்டியில் பலமான காய்நகர்த்தல்கள்

விதிவிலக்காக மூன்று முறை பரிசீலிக்கப்பட்ட ரணில்; ஜனாதிபதி வேட்பாளராக முடியுமா????

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவு அவ்வளவு இலகுவாக அமைய போவதில்லை.குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை பெரும் ரகளையில் முடியும் விவகாரமாக அது அமைய சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. 

ரணிலா?
கருவா?
சஜித்தா?

என்ற போட்டியில் பலமான காய்நகர்த்தல்கள் இடம்பெற்று வருகின்றன.

ரணிலை பொறுத்தவரை இது தனது ஆயுளில் கிடைக்கும் அந்திம சந்தர்ப்பமாக பார்க்கிறார். இதனை தவறவிடடால் இனி நமக்கு சந்தர்ப்பமே வாய்க்காது எனவும், இன்னுமொரு தேர்தல் வரும்போது நாம் உயிரோடு இருப்போமா அல்லது உடல்நிலை ஒத்துழைக்குமா என்ற எண்ணத்தில் எப்படியோ தனக்கு தற்போது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என முயற்சிக்கிறார்.

ஆனால், விஞ்ஞானரீதியில் - ஒரு பரிசோதனையில் 03 முறை ஒன்றை பரிசீலிக்கும் போது - இரண்டு முறை ஒரே முடிவுகள் வருமாயின் - மூன்றாவது முறை அதனை பரிசீலனை செய்வதில்லை. இரண்டு முறையும் ஒரே முடிவை தருவதால், அதனையே முடிவாக ஏற்றுக்கொள்வர்.

ஆனால், ரணிலை பொறுத்தவரை மூன்று முறையும் பரிசோதனை செய்தும் ஒரே முடிவே கிடைத்தது. 2005, 2010, 2015 ஆகிய மூன்று ஜனாதிபதி தேர்தலிலும் பரீட்சித்துப் பார்த்து (ஒன்றில் தோல்வி. மற்றைய இரண்டிலும் தோல்வியடைவார் என்ற கருதுகோளில் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை) ஒரே முடிவே கிடைத்துள்ளதனால் - ரணில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது முடிவான முடிவாக கருதப்படுகிறது.

கருவை பொறுத்த வரை - அவர் தானாக தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. அவர் இழுத்துவிடப்பட்டுள்ளார் என்பதே உண்மை. சஜித்தை பலவீனப்படுத்துவதற்காக ரணில், ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, லக்ஷமன் கிரியெல்ல போன்றோரால் முன்தள்ளப்படடவரார். வயது ஒத்துழையாமையும் அதிக பரீட்சியமற்றவருமாவார். அது மட்டுமல்லாமல் சிங்கள வாக்குகளை பெறக்கூடியவராக இருப்பினும், சிறுபான்மையினரிடம் பாரியளவில் வரவேற்பை பெற்றவரல்ல.

ஆனால், சஜித்தை பொறுத்தவரை அவர் பாரியளவில் சிறுபான்மையினர் மத்தியில் வேலை செய்திராத போதிலும், பெருமெடுப்பிலான ஆதரவு தளம் உருவாகியிருப்பதையும், எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதையும் அவதானிக்கலாம். அதேபோன்று, கணிசமான சிங்கள வாக்குளை கவருமளவு ஆளுமை கொண்டிருப்பதையும் காணலாம். அதே போன்று அவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆதரவு தளமும் அவருக்கு பெரும் பலமாக அமையும்.

எனினும், அவ்வளவு இலகுவாக அவரால் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அந்தஸ்த்தை பெற முடியுமான நிலை இல்லை. சிரேஷ்ட தலைவர்கள், தேர்தல் கூட்டமைப்பு கடசிகளின் தலைவர்களின் ஆதரவு, பின் ஆசன பாராளுமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவு என்பவற்றை அவர் வெல்லவேண்டிய தேவை இருக்கிறது.

குறிப்பாக கூட்டு கட்சிகளைப் பொறுத்த வரை வெற்றிவாய்ப்புக்கள் உள்ள ஒருவரையே முன்தள்ள யோசிப்பர் என்பதால் சஜித்திற்கு அது அவ்வளவு பிரச்சினையாகவும் அமையாது. அவர்களே இறுதி முடிவை எடுக்கும் அழுத்த காரணிகளாக இருப்பார்கள் என்பதால் சஜித்தின் கவனம் அதிகமாக கூட்டுக் கட்சிகளை நோக்கியே தற்போது திரும்பியுள்ளதாக அறிய முடிகிறது.

AL Thavam

No comments

Powered by Blogger.