Header Ads



மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை, ஹிஸ்புல்லாவினால் திறக்க முடியாது - ரத்ன தேரர்

வழக்கு நடவடிக்கைக்கைகள் நிறைவடையும்வரை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை திறக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3ஆம் திகதி திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்றைய தினம் தெரிவித்தார்.

கடந்த ஜுலை மாதம் குறித்த பல்கலைக்கழகத்தை திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தபோதும், பல்வேறு சிக்கல் நிலைமைகளின் காரணமாக அந்த நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் எமது செய்திச் சேவையிடம் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை திறப்பதற்கு தற்போது எந்தவிதமான சட்டரீதியான தடையும் இல்லை என்றும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிலையில், கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளபோதே நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Ajan உங்களின் கனவு அது.

    ReplyDelete
  2. Jaffna Muslim நீங்கள் Ajan உடைய கருத்துக்களையும்,இன்னும் இனவாதிகலின் கருத்துக்களையும் மட்டும் பதிவிடுங்கல்.அந்த இனவாதிகலின் கருத்துக்களுக்கு நாங்கள் வழங்கும் பதில்கலை தடைசெய்யுங்கல்,அல்லது பல மணித்தியாலங்கள் போன பின்பு பதிவிடுங்கல்.

    ReplyDelete

Powered by Blogger.