Header Ads



பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு, செல்ல வேண்டுமென ஜனாதிபதி என்னிடம் கூறினார்

கடந்த மாதம் ஜனாதிபதி என்னை அழைத்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல்களுக்கு செல்ல தயாராக வேண்டும் என்று கூறியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துவதில் கால தாமதம் ஏற்படுவது தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இதேவேளை, ஜனாதிபதி தனது ஆட்சிக்கால எல்லை குறித்து நீதிமன்ற ஆலோசனையை வினவுவதென்றால் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கேட்க வேண்டும்.

ஆனால் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தை நீட்டிக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனவும் நவம்பர் மாதம் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.

ஜனாதிபதி தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதில் எந்த சிக்கல்களும் வரப்போவதில்லை. நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அதனை நிறைவேற்றிக்கொண்டால் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த தயாராகும்.

இப்போது அதற்கு தயாராக வேண்டும். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் காலம் உள்ளதாகவே நான் கருதுகின்றேன். அரசியல்வாதிகளுக்கு இது சிறிய காலமாக இருந்தாலும் எமக்கு இது பாரிய கால எல்லையாக உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகள் தேர்தலை நடத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

1 comment:

  1. பாராளுமன்றத்தைக் கலைத்து முதலில் பொதுத்தேர்தலுக்குச்சென்றால் நாட்டின் ஆட்சி அதிகாரம் சனாதிபதி கையில் இருக்கும் .அப்போது தேவையான ஜில்மார்ட்டுகளைத் தயாரித்து சனாதிபதியின் விருப்பத்துக்கேற்ற அரசாங்கத்தை அமைப்பது இலகுவாக இருக்கும். தற்போது மூன்று அரசியல் குப்பாடிகளும் எப்படி தங்கள் ஜில்மார்ட்டை அப்ளை பண்ணலாம் என்ற திருட்டுத் தந்திரம்பற்றி ஆழமாகயோசிக்கின்றனர். நாடும் மக்களும் குப்பைக்குச்சென்றாலும் எங்கள் கட்சி ஆட்சியமைக்கவேண்டும் இதுதான் அந்த மூன்று ஜில்மார்ட் சீப்களின் ஒரே இலக்கு

    ReplyDelete

Powered by Blogger.