Header Ads



கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும்போது, அமெரிக்கா அறிக்கை வெளியிடாதது ஏன்..?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் உட்பட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் அமெரிக்காவின் திட்டத்தையே செயற்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வெனிசூலாவுக்கு எதிரான ஏகாதிபத்திய தலையீட்டை தோற்கடிப்போம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

அமெரிக்காவுடன் முதல் முறையாக 1995 ஆம் ஆண்டு சோபா என்ற உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அன்றைய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்காவின் கையால், சி.ஐ.ஏ அமைப்பிடம் சம்பளம் வாங்கும் நபர்களின் பட்டியலில் இருக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டது. அந்த ஜீ.எல்.பீரிஸே, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க குடியுரிமையை கைவிடாத, கைவிடவும் நினைக்காத பசில் ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்.

குடியுரிமையை இரத்துச் செய்து விட்டாரா என்பது இன்னும் தெளிவில்லாத கோத்தபாய ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் முன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்காக அமெரிக்காவின் பதில் உதவி ராஜாங்க செயலாளர் ஆகியோர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.

சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட போது அறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் போது அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

ஒரு நாட்டை தனக்கு ஏற்ற வகையில் கையாள அமெரிக்கா எப்படியான திட்டங்களை வகுக்கின்றது, தலையீடு செய்கின்றது என்பதை இந்த நடவடிக்கைகளின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Oh Srilankan public... this the reality of UNP and OPPOSITION with US and SOFA agreement ..

    But in stage they pretend not supporting US SOFA AGREEMENT

    ReplyDelete
  2. அமேரிக்க இல்லையென்றால் இன்னேரம் இலங்கையை iSIS கைப்பற்றி இஸ்லாம் ஆட்சியை நிறுவியிருப்பார்கள்

    ReplyDelete
  3. Americans are not fool to allow Gota to contest the presidential election without hidden agendas.

    ReplyDelete

Powered by Blogger.