இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல், வேறொரு தளத்தினை நோக்கி நகர்ந்திருக்கின்றதா..?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை அரசியலும் முஸ்லிம்களின் வாழ்வியலும் வேறொரு தளத்தினை நோக்கி நகர்ந்திருக்கின்றன.
காத்தான்குடிப்பள்ளிவாயல்களில் நிகழ்ந்த படு கொலைகளை 29 வது வருடமாகவும் மிக்க உணர்வுபூர்வமாக நினைவுகூர்கின்ற அதேவேளை ...
அதே ஊரைப்பிறப்பிடமாக கொண்ட ஒருவரால் தலைமையேற்று நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் இழப்பும் கனதியும் அதிகமானது.
103 ஷுஹதாக்களின் வலி 29 வருடங்கள் கடந்தும் எம்மைத்தைத்துக்கொண்டிருந்தால் 250 இற்கும் அதிகமான அந்த அப்பாவி மக்களின் பிரிவால் எத்தனை ஊர்கள் இன்று துன்பத்தில் தவிக்கின்றன என்பதை எண்ணிப்பார்ப்பதே இன்றைய ஷுஹதாக்கள் நினைவு நாளில் செய்யவேண்டிய மிகப்பெரிய வேலையாக எஞ்சி நிற்கிறது!
அவர்கள் இன்னும் எத்தனை வருடங்களுக்கு கண்ணீர் வடிக்கப்போகிறார்கள்? இன்னும் எத்தனை தசாப்தங்களுக்கு அவர்களது தழும்புகள் வலிக்கப்போகின்றன? என்கின்ற கேள்விகள் நமது மனச்சாட்சிகளுக்கு முன்னே விஸ்வரூபமாய் எழுந்து நிற்கின்றன.
ஈழப்போராட்டத்தின் பெயரால் காத்தான்குடி பள்ளிவாயல்களில் அப்பாவிகள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போது ஈழ விடுதலை போராட்டத்தை ஆதரித்தவர்களில் மிகப்பெரும்பாலான மக்கள் அந்த துர் செயலை விரும்பவில்லை, வெளியில் பகிரங்கமாக சொல்லாவிட்டாலும் அவர்களுக்குள் வலுத்த கண்டனங்கள் எழுந்தன, பின்னர் மெதுவாக ஆங்காங்கே அவை வெளித்தெரியவும் தொடங்கின.
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகள் அரசியல் அல்லது யுத்த உதிரி நோக்கங்களை கொண்டது, அது இந்து/ சைவ கடவுள்களை திருப்திப்படுத்த செய்யப்பட்டவை அல்ல!
ஆனால் துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவான குழுவொன்று செய்த அண்மைய பயங்கரவாத தாக்குதல் இஸ்லாத்தின் பெயரால் இறைவனை திருப்திப்படுத்த செய்யப்பட்டதாக தவறான பொருள்கோடலுடன் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஈழப்போராட்டத்தை ஆதரித்தாலும் அதன் பெயரால் நிகழ்ந்த ஒரு வன்கொடுமையினை அதன் மானசீக ஆதரவாளர்களே கடுமையாக வெறுத்ததை விட பல மடங்கு இஸ்லாத்தின் பெயரால், இறைவனின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை இலங்கை முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக வெறுத்தது மட்டுமல்ல பகிரங்கமாகவே எதிர்த்தது!
முஸ்லிம்களின் எதிர்ப்பும் பயங்கரவாதிகளை கண்டறிவதில் அவர்கள் வழங்கிய ஒப்பற்ற ஒத்துழைப்புந்தான் குறுகிய நாட்களுக்குள் இந்தப்பிரச்சினையினை ஒரு கட்டுக்குள் கொண்டுவர உதவியது.
குறிப்பாக சாய்ந்தமருது சம்பவங்கள் இதற்கு பெரிய சாட்சி.
இனியொரு பெரிய பயங்கரம் இந்த தேசத்தில் நடந்துவிடக்கூடாது, ஆனால் அடுத்ததொரு சம்பவம் நடக்கும் வரை பேரவலமாகவும், பெரு நினைவாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலின் கருப்பொருளாகவும் நிலைக்கப்போவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்தான்.
ஆகையால் 29 வருடங்களுக்கு முன்பாக பெரு வலியை உணர்த்த காத்தான்குடி சமூகம் தவிர்க்க முடியாமல் இன்னொரு பேரழிவிற்காக அண்மையில் எல்லா விதத்திலும் அதிக விலையினையும் கொடுக்க நேர்ந்தது.
ஆகஸ்ட் 03 இரவில் இஷாத்தொழுகையில் நின்றவர்களை முதுகுகளில் சுட்டும் குண்டுகளை வீசியும் கொன்றதற்கும், ஏப்ரல் 21 இல் தேவாலயங்களில் வழிபாடுகளில் நின்ற அப்பாவிகளின் மீது தற்கொலைத்தாக்குதல்களை நிகழ்த்தி கொன்றதற்கும் பெருத்த வேறுபாடுகள் கிடையாது.
இறந்தவர்களதும், காயப்பட்டவர்களதும் எண்ணிக்கைகள் மாத்திரமே வேறானது.
சிதறிய உடலங்கள், வழிந்த ரத்தம், சிந்திய கண்ணீர், துயரம், வலி, வடுக்கள், நினைவுகள் என சூழ்ந்த அனைத்துமே ஒன்றுதான்!
ஒற்றை மனித குலத்தின் இழப்பின் பேரொலிதான்.
29 வருடங்களுக்கு முன்னரான பேரவலத்தின் சப்தத்தை விட இன்னும் 4 மாதங்கள் கூட ஆகாத ஏப்ரல் அழிவுகளின் சப்தங்கள் விஞ்சி நிற்கின்றன!
இந்த யதார்த்த புள்ளியை மிக கவனமாக அவதானித்தவர்களாக இலங்கை முஸ்லிம்கள் தங்களது அடுத்த நகர்வினை செய்யவேண்டும்.
அரந்தலாவை, தலதா நினைவுகள்
பள்ளிவாயல் படுகொலைகளின் நினைவுகள்
முள்ளிவாய்க்கால் நினைவுகள்
உயிர்த்த ஞாயிறு நினைவுகள்
என ஏராளமான மிக கடுமையான காயங்களோடு நாம் எத்தனை காலங்களுக்கு பயணிக்க போகிறோம்?
ஒரு தேசமாக உயிர்த்தெழவே முடியாமல் இனவாத அரசியலின் வழுக்கு மரத்தில் மீண்டும் மீண்டும் சறுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறோம்.
எல்லாம் வல்ல இறைவனே துயரப்பட்ட அனைத்து ஆன்மாக்களுக்கும் உன்னுடைய அளவற்ற கருணையினை காட்டுவாயாக...
இந்த நாட்டிற்கு இனியாவது ஒரு நல்ல வழியை காட்டுவாயாக..
உன்னைத்தவிர எங்களது நம்பிக்கையின் படி உதவுதற்கு வேறு யாருமிலர்.
Mujeeb Ibrahim -

இஸ்லாம் கூறும் 3 தினங்கள் துக்க தினம் ????? மரணித்தவர்கள் குடும்பத்தினர் எந்த மதத்தினர் என்று சிந்திக்கவும் சிலரின் அரசியல் நோக்கத்திக்காக கொண்டாடும் இந்த துக்க தினத்துக்கு எதிராக குடும்பத்தினர் வீதிக்கு இரங்கி போராடுவது கடமையாகிறது அவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருப்பின் !
ReplyDeleteஉண்மை பயங்கரவாதிகள் பிரபாகரன்,சஹ்ரான் இரண்டு மிருகங்களும் நடத்திய மிலேச்சத்தனமான,மிருகத்தனமான தாக்குதல்கள் Sri Lanka வரலாற்றில் மறக்க முடியாத தாக்குதல்கள்.ஆனால் சஹ்ரானின் தாக்குதல் நடந்ததும் அதை 100% Muslim சமூகமும் எதிர்த்தது மாத்திரமன்ரி பயங்கரவாதிகள் திட்டமிட்ட அடுத்த தாக்குதலை முறியடிக்க அரசுக்கும்,பாதுகாப்பு தரப்புக்கும் சாய்ந்தமருதில் மிகப் பெரும் ஒத்துழைப்பை வழங்கியது.ஆனால் பிரபாகரனுக்கு அடுத்த பக்கத்தில் இருந்து Sri Lanka வில் நடந்த ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் ஆதரவும்,ஒத்துழைப்பும்,நிதியும்,பாராட்டுக்களும் 95% மானோர் பயங்கரவாதி பிரபாகரனுக்கு வழங்கினார்கள் என்பது மறுக்கவோ,மறைக்கவோ முடியாத கசப்பான உண்மை.
ReplyDeleteஇனவாதிகல் சிலர் என்னை பார்த்து இனவாதி எனச் சொல்லும் முட்டாள்கலுக்கு ஒன்ரை மட்டும் சொல்லிக்கொல்கிரேன்,Jaffna Muslim ல் நீங்கள் சில வருடங்களாக நீங்கள் பதிவிட்ட பதிவுகளை மீல் ஆய்வு செய்து பாருங்கள் முதலில்.அப்போது விளங்கும் யார் இனவாதி,ஒவ்வொரு செய்திக்கும் முதலில் முண்டி அடித்துக் கொண்டு வெளிப்ப்டையாக பல தமிழர்களும்,ஆலோசனை சொல்வது போல் மறைமுகமாக இன்னொருவரின் இனவாத கருத்துக்களை மிக அதிகமாக காண முடியும்.ஆனால் இப்போ ஒருவர் மிரட்டும் பாணியில் Jaffna Muslim க்கு எனது பதிவுகளை தடை செய்ய வேண்டும் அல்லது அவர் வெளியேரப் போவதாக பதிவிடுகிரார்.ஆனால் ajan,anush போல ஆட்கள் இனவாதத்தை கக்கிய போது அதை எதிர்த்து ஏனய்யா நீங்கள் பதிவிடவில்லை,இதில் இருந்து வெளியேறவில்லை? இதிலிருந்து புரிகிறது உங்கள் ஜன நாயகமும்,நடு நிலைப் போக்கும்.நீங்கள் வெளியேறி செல்வது உங்கள் சுதந்திரம்.ஆனால் அடுத்தவரின் கருத்து சுதந்திரத்தை தடுக்குமாரு கோரிக்கை விடுவது கேவலமானது.
ReplyDeleteJaffna Muslim உண்மைகளையும்,நடந்த சம்பவங்கலையும் நான் கூறுவதனால்,சிலருக்கு கோபம் வருகிறது,அவமானம் பீரிட்டு பாய்கிறது.எனவே அவர்களின் மிரட்டலுக்கு பணிந்து நீங்கள் எனது கருத்துக்கள் சிலவர்ரை வெளியிடாமல் தணிக்கை செய்வது பத்திரிகை சுதந்திரத்துக்கு முரணானது.ஏனெனில் இதுவரை எனது இரண்டு பதிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ReplyDeleteரிசாட், பிரபாகரனும் சஹ்ரானும் மட்டும் தானா இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத பயங்கரவாதிகள்? சிங்களவர்கள் மத்தியில் எந்த பயங்கரவாதிகளும் இல்லாமலா சிங்களவர்களால் முஸ்லிம்கள் மீது இவ்வளவு தாக்குதல்களும் நடக்கின்றன? முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்களவர்களுக்கு, சிங்கள அரசும், பௌத்த பிக்குகளும் முழுமையான ஆதரவை வழங்குகிறார்கள் தானே? இப்படித்தான் தமிழரும் பிரபாகரனுக்கு ஆதரவு வழங்கினார்கள். கருணா சிங்கள அரசுக்கு உதவி பிரபாகரனை அழித்தது போல, சில முஸ்லிம்களும் காட்டிக் கொடுப்பதில் முன் நிற்கிறார்கள்.
ReplyDelete