Header Ads



தவறான ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால், அனைத்தும் அழிவுக்குள்ளாகி விடும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஆசிட் பரிசோதனைக்கு ஒப்பானது என்று மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு-நாராஹேன்பிட்டையில் உள்ள அபாயாராம விகாரையில் நேற்று நடைபெற்ற ''2020 சவால்கள்'' எனும் தலைப்பிலான கலந்துரையாடலில் கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தின் கீழ் ஆறு பாதுகாப்புச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எதுவித முன்னேற்றமும் இல்லை. குறைந்த பட்சம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைக் கூட தடுத்துக் கொள்ள முடியவில்லை.

பாதுகாப்புச் செயலாளர் என்ற பதவிக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தியவர் கோத்தபாய ராஜபக்ஷ மாத்திரமே. மற்றவர்கள் எல்லாம் அதனை ஒரு வெறும் பதவியாக மட்டுமே வகித்துள்ளனர்.

இந்த அரசாங்கத்துக்கோ, பிரதமருக்கோ, அமைச்சரவைக்கோ நாட்டைப் பற்றியும் அதன் பாதுகாப்பு பற்றியும் கிஞ்சித்தும் கவலை இல்லை.

அந்த வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஆசிட் பரிசோதனையாகவே இருக்கப் போகின்றது. யாருக்கு வாக்களிக்கப் போகின்றோம் என்பதைப் பொறுத்து நம் நாட்டின் தலைவிதி நிர்ணயிக்கப்படப் போகின்றது.

தவறான நபர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அத்துடன் அனைத்தும் அழிவுக்குள்ளாகி விடும் என்றும் கமால் குணரத்தின மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.