Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளே,, ஷரீஆவோடு விளையாடுவாதை நிறுத்திக் கொள்ளுங்கள்...!

- அஷ்ஷைக் நாகூர் ளரீஃப் -

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் போன்று எங்கும் வழங்கப் படவில்லை. அவர்களது இயற்கைச் சுபாவத்திற்கும் மென்மைக்கும் இனங்கிப் போகும் எந்த உரிமைகளையோ கடமைகளையோ மறுக்கவோ தடுக்கவோ இல்லை. அதே நேரம் அவர்களது இயற்கையோடு இனங்கிப் போகாத எந்தக் கட்டளைகளையும் அவர்கள் மீது சுமத்திச் சிரமப்படுத்தவும் இல்லை.

அல்லாஹ் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான நபிமார்களையும் றஸூல்மார்களையும் உலகிற்கு அனுப்பினான். வேதத்தையும் அருளினான். ஆனால் அவர்களில் அனைவரையும் ஆண்களாகவே அனுப்பியுள்ளான். எந்தப் பெண்களையும் அனுப்பியதாக முஸ்லிம்கள் விசுவாசிப்பதும் கிடையாது. ஏனெனில் அப்பொறுப்பினைச் சுமக்கும் சுபாவமும் ஆற்றலும் ஆண்களுக்கு மாத்திரமே உள்ளன என்ற காரணத்தில் பெண்களை அல்லாஹ் தெரிவு செய்யவில்லை.

இது போன்றதே கிலாஃபத் எனும் உயர் பொறுப்பும் ஆண்களுக்கு மாத்திரமே சுமத்தப்பட்ட ஒரு பாரிய சுமையாகும். குலபாஉர் ராஷிதூன் எனும் நான்கு கலீபாக்கள் உட்பட உமைய்யா, அப்பாஸிய, உஸ்மானிய பேரரசுகள் 632 முதல், 1924 ஆண்டு உஸ்மானிய கிலாஃகத்தின் இறுதி கலீஃபா இரண்டாம் அப்துல் மஜீத் வரை சுமார் 100 கலீஃபாக்கள் இருந்துள்ளனர்.இவர்களில் எவருமே பெண்கள் இல்லை என்பதுவே, பெண்கள் இச்சுமையைச் சுமக்க முடியாதவர்கள் என்பதற்கான சான்றாகும். அவ்வாறு அனுமதிக்கப்பட முடியுமென்றிருந்தால் எங்காவது ஒரு பெண் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொழுகையின் பொதுவான இமாமாக முன்னின்று தொழுகையை பெண்களால் நடாத்த முடியாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இமாமாக நிற்பவர் ஓர் ஆணாக இருக்க வேண்டும் என்று ஷரீஆ கட்டுப்பாடு விதித்துள்ளது. அன்னைகளான ஆஇஷா, ஹஃப்ஸா (ரழி) போன்ற மாமேதைகள் இருந்தும் இவர்களுகள் எத்தொழுகைக்கும் எச்சந்தர்ப்பத்திலும் முற்படுத்தப்படவில்லை.

இதே போன்றதே வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கமுமாகும். இதுவும் ஆண்கள் சுமக்க வேண்டிய பொறுப்பே அன்றி பெண்கள் சுமக்கும் பொறுப்பு அல்ல, இதுவெல்லாம் பெண்களின் உரிமைகளை மறுப்பதாகக் கொள்ளப்படலாமா?

ஓர் ஆணின் சாட்சியம் இரண்டு பெண்களின் சாட்சியத்துக்குச் சமமானது என்று அல்லாஹ் அளவீடு செய்துள்ளானே இது பெண்களை அவமதிப்பதாக் கொள்ளலாமா? இது அவர்கள் சுபாவத்தின் அளவு கோளாகும். அவர்களால் சுமக்க முடியாதவற்றை சுமத்தாட்டவில்லை.

இது போன்ற ஒன்றே காழிகளாகப் பெண்கள் நியமிப்பதுமாகும். இப்பொறுப்பு பெரும்பாலும் நிகாஹ், வலி, தலாக், இத்தா, ஃபஸ்கு, குல்உ போன்ற பல் வேறுபட்ட அம்சங்கள் ஃபிக்ஹ் சட்டத்துறையோடு சம்பந்தப்படுள்ளதால், கண்டிப்பாக ஃபிக்ஹுத் துறை சார்ந்த சன்மார்க்க அறிஞர்களது கருத்துக்களும், தீர்ப்புக்களும் அலசப்படுவது அவசியமாகின்றது.

'ஜும்ஹூருல் ஃபுக்கஹா' எனப்படும் அதிப் பெரும்பான்மையான இமாம்;களதும் அவர்களது பலமான கருத்துக்களின் அடிப்படையிலும் பெண்கள் ஷரீஆத் துறைசார் காழிகளாக எப்போதும் நியமிக்கப்பட முடியாது என்பதாகும். காழியாக நியமணம் பெறுபவர் ஓர் ஆணாக இருத்தல் அடிப்படை நிபந்தனையாகும் என்றே குறிப்பிட்டுள்ளனர். அவர்களிள் குறிப்பிடத்தக்கவர்களாக இமாம் மாலிக், இமான் ஷாஃபிஈ, இமாம் அஹ்மத், இமாம் நவவீ, இமாம் ராஃபிஈ, இமாம் இப்னு தைமிய்யா, இமாம் இப்னு குதாமா, இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுமுல்லாஹ்) போன்ற பலர் அடங்குவர்.

இவ்விவகாரம் பொது நோக்கின் அடிப்படையிலும், பலமான ஆதாரங்களையும் கொண்டு இத்துறைசார்ந்த அறிஞர்களாலேயே  தீர்மாணிக்கப்படல் வேண்டும். மாறாக மலேசியா, தூனிசியா போன்ற நாடுகளில் அமுலில் இருக்கும் போது ஏன் எமது நாட்டிளுள்ள சட்டத்தரணிகளான பெண்கள் நியமணம் பெற முடியாது? என்று நியாயம் கற்பிப்பது அவர்களது சன்மார்க்கதின் வறுமையையே காட்டுகின்றது. இவ்வாறு நியாயம் கற்பிப்போர் நாளை சஊதியல் இடம் பெறும் இன்னிசைக் கச்சேரிகளையும் காண்பித்து, மக்காவிலும் மதீனாவிலும் இடம் பெற முடியுமாயின் ஏன் எமது நாட்டில் ஆகுமானதல்ல? என்று கேட்கவும் துணிவார்களா?.

ஆண் காழிகளால் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பெண்களை நியமிக்க வேண்டும் என்று கோருவோர்களிடம், பெண்கள் காழிகளாக நியமிக்கப்பட்ட பின்னர் ஆண்களுக்கு அநீதி செய்தால் என்னது செய்யப்போகிறீர்கள் என்று கேட்கப்பட்டால் என்ன பதில் சொல்வார்களோ?

பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா போன்றோர்களின் கருத்துப்படி, சட்டத்தரணிகளான பெண்கள் காழிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுபவர்கள், நமது தேசத்தில் பேணுதலும், அறிவும், ஆற்றலும் நிறைந்து காணப்படும் ஆயிரக்கணக்கன பட்டம் பெற்ற மௌலவியாக்களை மறந்தது ஏனோ? சட்டத்தரணிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, தலைவிரி கோலத்தோடு  கருத்துச் சுதந்திரம் பேசித் திரிபவர்களால் மாத்திரமே மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை செம்மையாகச் செய்து முடிக்க இயலும் என்பதனாலா?

எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களே! பெண்ணியவாதிகளே! மேற்கின் வலையில் சிக்குண்டவர்களே! ஃபிக்ஹோடும் ஷரீஆவோடுமு; சம்பந்தப்பட்ட விவகாரங்களை, விரல் விட்டு எண்ணப்பட முடியுமான ஓரிருவரின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் எடுப்பதை விட, முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யக் கவனமெடுங்கள். தமக்குத் தெரியாத மற்றும் தெளிவில்லாத விவகாரங்களில் தலையிடுவதையும் கருத்துச் சொல்வதையும் தவிர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்விடம் பொறுப்புக் கூற வேண்டி இருக்கிறது என்பதை மறந்து வடாதீர்கள்.

12 comments:

  1. பெண்களை ஓரம் கட்டச்சொல்லும் எத்தனையோ விடயங்களில் இஸ்லாம் முன்னுரிமை கொடுத்து பெண்களை சிறப்பித்துள்ளது, ஏனைய எந்த சமூகமும் கொடித்திராத பல உரிமைகளை கொடுத்து பெண்களை சிறப்புக்குரியவர்களாக கருதும் இஸ்லாத்துக்கு மாற்றமான இவர்களின் பிடிவாதமான கோரிக்கை நாளை இந்த பெண்களை கேவலப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ReplyDelete
  2. மிக அழகான,ஆழமான விடயம்.மிகத்தெளிவாக விளக்கம்.நன்றி.

    ReplyDelete
  3. அஷ்ஷைக் அவர்களே பெண்களின் கருத்துக்கு மாறாக ஆண்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதாக சில மார்க்க உபந்நியாசிகள் சொல்லுகின்றனர் அதுவும் உண்மையா?

    ReplyDelete
  4. அறிவுபூர்வமான காலத்திற்கு தேவையான விளக்கம்!

    ReplyDelete
  5. நீங்கள் இப்ப “முஸ்லிம் அரசியல்வாதிகளே ஷரீஆவோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்றியல். இங்கப் பாருங்க! நீங்க ஒரு விஷயத்தை நல்லா யோசிச்சு பார்க்கனும்! நல்ல சம்பளத்தில அவங்களுக்கு தொழில் வாய்ப்பை எடுத்துக் கொடுத்தீங்க. ஏத்துக் கொல்றம். கொழும்புல அவங்களுக்கு அரசுச் செலவுல ஊடு எல்லாம் எடுத்துக் கொடுத்தீங்க. அதுவும் உண்மைதாங்க. போதாததுக்கு லக்ஷரி கார் (Luxury Vehicles) எல்லாம் எடுத்துக் கொடுத்தீங்க. அதுவும் சரிங்க. ஆனா நீங்க எல்லாம் சேர்ந்து முஸ்லீம் சனத்துக்கு சேவை செய்யனும்னு அவங்ககிட்ட எப்பவாவது சொன்னீங்களா. இல்லைதானே. சரி அதையும் விடுங்க. ஒங்களை எல்லாம் எக்குஸ்குக்குஸ் பண்ணுறம். செய்ததைத்தான் செஞ்சீங்க. அடப்பாவிங்களா. அவங்க MP மார். பெரிய Ministers னு சாப்பிட்டுப்போட்டு ஏதோ வெளயாட ஏதாவது வசதிகள் செஞ்சு கொடுத்தீங்களா. பேச வந்துட்டாங்க. கொஞ்சம் Tennis, Rackets, Soccer, badminton Squash, Swimming, Jokking, boxing, wrestling இப்பிடி அவங்கட தரத்திற்கு ஏற்ப வெளயாடுரதுக்கு ஏதாவது வசதி செய்து கொடுத்தீங்களா? வெளயாட வசதி செய்து கொடுக்காததால்த்தான் அவங்க இப்ப ஷரியாவுக்குள்ள புகுந்து வெளயாட ஆரம்பிச்சு இருக்காங்க. எப்பவும் எங்கட அரசியல்வாதிங்க தெரியாததுக்குள்ளதான வாப்பா புகுந்து வெளயாடுவாங்க. இன்னுங் கொஞ்ச மாசங்தானே இருக்கு. அப்ப பாத்துக் கொ”ல்லு”வோம்.

    ReplyDelete
  6. தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு செல்பவர்களைதான் ஒரு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர கஷ்டம். அவனுகள் தனது தலைவர்களை சந்தோசப்படுத்தினால் தான் அவருக்கு மேலும், மேலும் தேசியப் பட்டியல் கிடைக்கும்.

    எனவே அவனுகளுக்கு இஸ்லாம், அல்லாஹ், ரஸுல் ஒன்றும் பெருட்டல்ல.

    எனவே எல்லா முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து இது போ‌ன்ற வர்களை தேசிய பட்டியலில் எடுக்க வேண்டாம் என வரும் அரசாங்கத்தை அழுத்தம் கொடுப்பேம்.

    கருத்துக்களை பரிமாறிக் கொண்டு இருப்பதில் பிரயோசனம் கிடையாது.

    ReplyDelete
  7. Very nice article allha will guide u all the time in right way bro Ameen

    ReplyDelete
  8. அது மட்டுமல்ல அல்லாஹுத்தஆலா ஆணைத்தான் தன்கலீபாவாகப்படைத்து அமர்களை யும் இப்லீசசையும் அந்த மனித குலத்தின் முதல்வனுக்கு சிரம்பணிய கட்டளையிட்டான்.அதில் பெண்ணுக்கு சிரமபணிய அங்கு சந்தர்பபம் இல்லை.பெண்பின்னர்தான் ஆதாமின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டான்.மேலும் மனிதனுக்கு மனிதன் சுஜூது செய்ய கட்டளை இடப்படுமாயின் பெண்களை தம் கணவனுக்கு சுஜூது செய்ய கட்டளையிடுவேன் என் நபிகள் நாயகம்( ஸல்)அவர்கள் சஹாபா பெருமக்களுக்கு கூறியதையும் கருத்தில் கொள்ளவும்.இவையெல்லாம் இஸ்லாமிய யதார்த்தம் .மனித சிந்தனை செருகுதலுக்கு இடமில்லை.

    ReplyDelete
  9. Good article alhamdulillah

    ReplyDelete
  10. Absolutely correct and good...timing correct...
    Intha kaalam naveena kaalamdu solraanga yes..unmathaan athaala islaatthayyum naveenaamaakka ninaikkuraanga...hello aleeady islam naveenamaatthaan irikki athu theriyaamatthaan innaiku em penkal thadumaatrama alanji thiriya paarkkuraanga....
    Ungaluku aneethi ilaykkappattal islaatthula nerayya walihal undu athu padi thedipponga...athu penkaluku gourawam..sila aankal seyyum thawaraal islaatthaai kaattikudukka ninaippathu allahuku seyyum throham...
    Allah is gread....paarawaikku puriyaathu...

    ReplyDelete
  11. ஒரு அரசியல்வாதியாக இருந்து சமூகத்துக்கு செய்ய வேண்டியத மறந்திட்டிங்க. ஒங்களுக்கு தேவல்லாத விசயத்தில மட்டும் மூக்க நுளைக்கிறிங்க. இதெல்லாம் யாரின் தேவைக்காக.
    இஸ்லாமிய சட்டத்துல திருத்தம் கொண்டுவாரதுக்கா மக்கள் உங்கள பாராளுமன்றத்துக்கு அனுப்பனாங்க?????

    ReplyDelete

Powered by Blogger.